மேலும் அறிய

தொடரும் மழை.. புழல், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி நிலவரம் என்ன ? சென்னைக்கு ஆபத்தா ?

Chennai Lakes: சென்னை புழல், செம்பரபாக்கம் மற்றும் பூண்டி ஆகிய நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். இன்று (13.12.2024) காலை 6.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.69 அடியாகவும், கொள்ளளவு 2950 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2281 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. 

எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Redhills Surplus Course) ஏரியிலிருந்து இன்று 13.12.2024 காலை 09.00 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. எரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24,00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று (13.12.2024) காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23,59 அடியாகவும், கொள்ளளவு 3538 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6132 கன அடியாகவும் உள்ளது. எரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) ஏரியிலிருந்து இன்று 13.12.2024 காலை 8.00 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று 13:122024 காலை 10.30 மணி அளவில் விநாடிக்கு 4,500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

எனவே, ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனும், குன்றத்துர். திருமுடிவாக்கம், வழுதியம்பேடு திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கம் 

சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்று (13.122024) காலை 4.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 34.68 அடியாகவும் கொள்ளளவு 3041மில்லியன் கன அடியாகவும் மற்றும் பூண்டியின் நீர் வரத்து 9890 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று 12122024 மாலை 5.00 மணி அளவில் விநாடிக்கு 5000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 13.122024 காலை 6.30 மணி அளவில் விநாடிக்கு 12,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

வெள்ள அபாய எச்சரிக்கை

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம். ஆட்ரம்பாக்கம். ஒதப்பை. நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு. மெய்யூர், வெள்ளியூர். தாமரைப்பாக்கம். திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம். மடியூர். சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம். இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர். சடையான்குப்பம்,எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார் !! சிறுவர்கள் , கர்ப்பிணிகளை தாக்கும் சின்னம்மை !! அறிகுறிகள் என்ன ?
மக்களே உஷார் !! சிறுவர்கள் , கர்ப்பிணிகளை தாக்கும் சின்னம்மை !! அறிகுறிகள் என்ன ?
பத்திரப் பதிவில் இந்த தவறுகள் இருந்தா பெரிய சிக்கல் !! கவனமா இருங்க !!
பத்திரப் பதிவில் இந்த தவறுகள் இருந்தா பெரிய சிக்கல் !! கவனமா இருங்க !!
புதிய வீடு கட்ட போறீங்களா ? அஸ்திவாரம் போடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க !!
புதிய வீடு கட்ட போறீங்களா ? அஸ்திவாரம் போடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க !!
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Embed widget