Chennai Power Cut: சென்னையில் நாளை இந்த பகுதிகளில் மின்வெட்டு.! முக்கிய பணிகளை இன்று முடித்திடுங்க.!
Chennai Power Cut September 05: சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின் தடையானது இருக்கும் என பார்ப்போம்.
சென்னை நாளைய மின்வெட்டு: சென்னை மாநகரில் மின்சார துறை பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில பகுதிகளில், செப்டம்பர் 5 வியாழக்கிழமையான நாளை சில பகுதிகளில் மின் தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் வெட்டானது, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், பராமரிப்பு பணியானது, சீரான மின்சாரத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிகளானது, குறித்த காலத்திற்கு முன்னதாக முடிந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை சென்னை மாநகரில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் எவை என்பது குறித்து பார்ப்போம்.
தாம்பரம்:
சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட்ஸ், டி.டி.கே நகர், எருசலேம் நகர், சர்ச் ரோடு, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ் ராஜன் நகர், ஜி.கே மூப்பனார் அவென்யூ.
திருவேற்காடு:
ராணி அண்ணா நகர், அசோக் புல்வெளிகள், வள்ளி கொல்லை மேடு, பெருமாள்கரம் தொழிற்பேட்டை, பி.எம்.ஆர் தொழிற்பேட்டை, காமராஜபுரம், கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என் சாந்தி நகர், காஸ்மோ போலீஸ், ப்ரெண்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் பேஸ் I & II
TI Cycles:
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பிஎம்ஆர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காமராஜபுரம், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் சாந்தி நகர், காஸ்மோபோலிஸ், பிரென்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் ஃபேஸ் I & II.
எப்போது மின் தடை?
பராமரிப்பு பணி காரணமாக செய்யப்படும் மின் தடையானது செப்., 5ம் தேதி, காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, நகரின் பல்வேறு பகுதிகளில் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டால், மதியம் 2:00 மணிக்குள் மின் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை முன்னரே திட்டமிட்டு முடித்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை இருக்கும் போது, உங்களது செயல்பாடுகளை முன்னரே திட்டமிட்டு கொள்ளுங்கள். இந்த தற்காலிக இடையூறுக்கு ஏற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.