Chennai Power Cut: சென்னையில செப்டம்பர் 25-ம் தேதி நிறைய இடங்கள்ல மின் தடை இருக்கு - உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க
Chennai Power Cut(25-09-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 25-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
போரூர்
மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ நகர், வன்னியர் தெரு மற்றும் திருவீதியம்மன் கோயில் தெரு.
திருவேற்காடு
அசோக் புல்வெளி, செஞ்சுரியன் அவென்யூ, ஆரோ எலியாஸ், வடநூம்பல், பெருமாளகரம்.
அயப்பாக்கம்
ஐசிஎஃப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு மெயின் ரோடு, அத்திப்பட்டு, வானகரம் சாலை, பாரதி மேட்டுத் தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என் சாந்தி நகர், மேல் அயனம்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கோன்ராஜ் குப்பம், அக்ரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.
கொட்டிவாக்கம்
ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர், ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி, கற்பகாம்பாள் நகர், சீனிவாசபுரம், நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், காவேரி நகர், பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் மற்றும் ஹவுசிங்போர்டு அபார்ட்மென்ட், (தென்றல் H43 முதல் H50, முல்லை H70 முதல் H78 வரையிலான குடியிருப்புகள்).
செம்பியம்
கிருஷ்ணமூர்த்தி சாலை, ஜிஎன்டி சாலை, ஏபி அரசு தெரு, அண்ணா சாலை, கண்ணபிரான் கோவில் தெரு, எத்திராஜ் சாலை, கே.வி.டி மருத்துவமனை, மூலக்கடை, சந்திரபிரபு காலனி, தணிகாசலம் நகர், அன்னை சத்யா நகர், வெங்கடேஷ்வரா நகர், போலீஸ் குடியிருப்பு, முத்தமிழ் நகர் (5-வது–6-வது பிளாக்), முத்தமிழ் நகர் (5-வது–6-வது பிளாக்), முருகன் கோவில் தெரு, வனசக்தி நகர், சந்தோஷ் நகர், பாலாஜி தெரு, எமரால்டு தெரு, வெள்ளி தெரு மற்றும் கால்வாய் சாலை.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















