சென்னையில் பாதுகாப்புக்கு 200 ரோபோவை களமிறக்கும் சென்னை போலீஸ்..ஒரு கிளிக்தான்!
Chennai Robotic Cops: ரெட் பட்டன் - ரோபோடிக் காப் என்று பாதுகாப்பு அமைப்பை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எப்படி செயல்படுகிறது, எப்படி பயன்படுத்துவது குறித்து பார்ப்போம்.

இன்றைய உலகில், நவீன தொழில்நுட்பமானது பல துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டது. இதன் பயன்பாடும் மக்களுக்கு பெரும் உதவிகரமாக அமைவதோடு, மக்களின் வேலைகளை எளிமைப்படுத்தும் வகையில் இருப்பதால், இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ரோபோடிக் காப்:
இந்நிலையில், காவல் துறையில் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை காவல்துறை. ரெட் பட்டன் - ரோபோடிக் காப்' என்று அழைக்கப்படும் ஒரு புதுமையான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பயன்பாடானது வரும் ஜூன் மாதம் சென்னை நகரம் முழுவதும் 200 முக்கிய இடங்களில் அறிமுகமாக உள்ளது.
இந்த அதிநவீன அமைப்பு ரோபோட்டிக்ஸ், 24x7 சிசிடிவி கண்காணிப்பு, ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் அவசரகால தொடர்பு அம்சங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளது. இது சட்ட-ஒழுங்கு மற்றும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் எனவும், குறிப்பாக பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு, இதன் பயன்பாடு பெரும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய இடங்கள்:
இந்த ரோபோடிக் காப் ரயில் நிலையங்கள், ஷாப்பிங் வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது பூங்காக்கள் போன்ற அதிக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய அம்சங்களான நீண்ட தூர துல்லியத்துடன் 360 டிகிரி வீடியோ கண்காணிப்பு கேமிரா, நிகழ்நேர ஜிபிஎஸ் அடிப்படையிலான இருப்பிட கண்காணிப்பு, அவசரகால சிவப்பு பொத்தான், தானியங்கி அலாரம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு உடனடி எச்சரிக்கை, காவல் குழுக்களுடன் நேரடியாக இணைக்கும் நேரடி வீடியோ அழைப்பு அம்சம், மைக்ரோஃபோன் மற்றும் எச்சரிக்கையின் பேரில் ரோந்து வாகனங்களை உடனடியாக அனுப்புதல் ஆகியவை அம்சங்கள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை அதிரடி:
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், அவசர காலங்களில் விரைவான பதிலளிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ரெட் பட்டன் ரோபோடிக் காப் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
நெருக்கடியான நேரத்தில், சிவப்பு பொத்தானை அழுத்துவது தொடர்ச்சியான தானியங்கி செயல்களைத் தூண்டுகிறது - கேட்கக்கூடிய அலாரம், நிகழ்நேர வீடியோ ஊட்ட பரிமாற்றம் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் ஒரு வீடியோ அழைப்பு, இது காவல்துறையினர் நிலைமையை மதிப்பிட்டு தாமதமின்றி உதவியை அனுப்ப வழி ஏற்படுத்துகிறது.
(2/6)
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) April 28, 2025
The Greater Chennai Police 🚨 has introduced a new high-tech security system called ‘Red Button – Robotic COP’ to ensure the safety of the public and women in Chennai 🛡️.
Key features:
📍 24x7 real-time surveillance 🎥
📍 360° coverage with long-distance precision…
காவல்துறையில் ரோபோ:
இந்த AI-ஆதரவு கொண்ட ரோபோ பாதுகாப்பு அமைப்பு, அன்றாட காவல் பணியில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கும், பதிலளிப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், கள ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் அவர்களின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இந்த அமைப்பைப் பற்றி அனைவரும் அறிந்திருக்கவும், விரைவான உதவி மற்றும் பாதுகாப்பிற்காக அவசர காலங்களில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதை முதற்கட்டமாக சென்னையில் உள்ள பல முக்கிய இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இதை தொடர்ந்து , இதன் பயன்பாடுகளை விரைவுபடுத்தப்பட உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




















