தீபாவளி கூட்ட நெரிசல்; கொள்ளையர்களை கண்காணிக்க FRS கேமிரா - சென்னை காவல் ஆணையர்
கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொள்ளை அடிக்கும் கும்பலை பிரிக்க சிறப்பு கண்காணிக்க கேமரா FRS கேமரா பொருத்தப்பட்டுள்ளது - சென்னை காவல் ஆணையர் அருண்
தீபாவளி கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராய நகர் மற்றும் பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொண்டார். சாலையில் நடந்து சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மாம்பழம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ;
ரங்கநாதன் தெரு சுற்றிலும் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 64 கேமராக்களும் எஃப்ஆர்எஸ்(FRS) என்று அழைக்கப்படும் FACE RECOGNISING SYSTEM கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி நெரிசலில் கொள்ளை அடிக்கும் கும்பல்கள் ஏற்கனவே குற்றவாளி வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்தான புகைப்படங்களை படம் பிடித்து காட்டும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குழந்தைகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு
தீபாவளியை முன்னிட்டு சென்னை முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அடையாள அட்டை பேண்ட் முறை என்று கொடுக்க உள்ளோம். குழந்தைகளின் கூட்டத்தில் தவறவிடாமல் பாதுகாக்க இந்த திட்டம் மிகுந்த உதவும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு படை எடுக்கும் பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டில் உள்ளதால் தாம்பரம், மாதவரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்து நெரிசலை குறைக்க சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூன்று இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் மெட்ரோ பணிகள் மழை நீர் கால்வாய் பணிகள் போன்ற வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதனால் தான் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். நெரிசலை குறைக்க காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் தீபாவளி கொண்டாட காவல்துறை என்ன நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ள வேண்டுமோ அதற்கான பணிகளை காவல்துறை செய்து வருவதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளர் அருண் தெரிவித்தார்