மேலும் அறிய

சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்

சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி ஜூலை 10 ஆம் தேதி  தொடங்கும் - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை மாநகராட்சி சார்பாக தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம், ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் என்.ஜி.ஓ., கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பங்கேற்று அறிவுரைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் இராதாகிருஷ்ணன் பேசியது.

தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி குறித்து world veterinary service சார்பில் இன்று பயிற்சி வழங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணி வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடைசியாக சென்னையில் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நாய்கள் ஆணா, பெண்ணா, தடுப்பூசி போட்டுள்ளதா  உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில்  கண்டறியப்படும் என தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் மட்டும் இன்றி மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது. 

சென்னையில்  சுரங்க பாதையில் பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு உள்ளிட்ட 4 வழிகளில் மழை நீர் வெளியேறற்றபட்டு வருகிறது. உடனுக்குடன் தேங்கும் மழை தண்ணீரை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. 


சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்

சென்னையில் 8 ஆண்டுகளில் 1 லட்சம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 

மக்களுக்கு அத்தியாவசிய தேவையான  குடிநீர் கொடுக்கும் பணிகள் மற்றும்  கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் சவால்கள் உள்ளது. 

குறிப்பாக மழைக்காலங்களில் பொது சுகாதார பிரச்சனைகள் தண்ணீர், உணவு, பூச்சிகள், கொசு போன்றவைகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும்.

மழை காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கவனமாகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடித்து அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டதுள்ளது. மேலும், 7 முதல் 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிக்கபட்டுள்ளது. அவற்றை படப்பை உள்ளிட்ட பெட் வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆகையால் அடுத்த 3 மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது. இது ஒரு சுகாதார பிரச்சனை அல்லாமல் நோய் பிரச்சனை இது. அனைத்து நோய்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நீச்சல் குளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். நாம் தயாரான நிலையில் உள்ளோம். எப்போதும் மழைக்காலங்களில் கொதிக்க வைத்து நீர் குடிக்க வேண்டும், தொடர்ந்து கை கழுவ வேண்டும், கொரோனா காலங்களில் மட்டும் இந்த வழிமுறை கிடையாது. எல்லா நாட்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.


சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்

6 ஆண்டுகளுக்குப் பிறகு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி

மேலும், 100 இல் 5 நாய்கள் அதிகம் வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. 

தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் பிரச்சனை இருப்பது உண்மையாக உள்ளது. நாய் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தால் கூட அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே கூட்டம் நடைபெற்றது. நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி அடுத்த பத்து நாட்களுக்குள் மீண்டும் தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டம் நடைபெற உள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget