மேலும் அறிய
Advertisement
வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
தொடர்ந்து கடந்த சில நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் வேலை அளித்து, அதற்கான ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நிர்வாகமே நேரடியாக வழங்கி வரும் நிலையில், அவர்களை தனியார் நிறுவனத்தின்கீழ் கொண்டுவர பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தை கண்டித்து, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பராமரிப்பாளராக 15 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிர்மலா என்பவர் கூறுகையில், 15 ஆண்டுகளாக நாங்கள் பராமரித்து வருகிறோம். இங்கிருக்கும் ஒவ்வொரு சிங்கம் புலி என எந்த விலங்குகளாக இருந்தாலும் நாங்கள் அவற்றை குழந்தைகளாகவே கருதுகிறோம். எளிதில் யாராலும் இந்த பணியை ஒரே நாளில் செய்துவிட முடியாது. தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம் எங்களுக்கான உரிமையை அரசு தர வேண்டும் என தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் பால்பாண்டி கூறுகையில், இங்கிருக்கும் ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளர்களும் அன்னாடங்காய்ச்சிகளாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்கிறோம் எனக் கூறி பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கொரோனா தொற்று காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த இவர்களை முன்கள பணியாளர்களாக, அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். இப்படிப்பட்ட சூழலில் தினக்கூலியாக அரசாங்கத்திடம் இருந்து பெற்று வந்தோம். ஆனால் இப்போது எங்களை தனியாரிடம் தாரைவார்த்து இருப்பது வருந்தத்தக்கது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது .
அரசாங்கமே ஊழியர்களை அழைத்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை. எவ்வளவு கல்லூரிகள் உள்ளது. ஆனால் எங்கேயாவது புலி, யானை விலங்குகளைப் பராமரிக்கக் கற்றுக் கொடுக்கிறார்களா. அப்படி எதுவும் இல்லை, ஆனால் பட்டம் பெறாமல், எப்படி அவற்றை பாதுகாப்பது என்பது குறித்து இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தான் தெரியும். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் கூட தனியார் வேண்டாம். இவர்கள் உடனடியாக இதில் பின்வாங்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் இருக்கும். தனியாரிடம் தாரைவார்த்து ஊழியர்கள் என்ன அடிமைகளா என தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் ஊழியர் இரணியப்பன் கூறுகையில், நான் இங்கே தினக்கூலி ஊழியராக பணியில் சேர்ந்து நிரந்தர ஊழியராக அரசால் நிரந்தரம் செய்யப்பட்டேன். ஆனால் தற்போது தனியாரிடம் கொடுத்திருப்பது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதற்கு சமமாகும். ஏதாவது ஒன்று என்று நிர்வாகத்தை கேட்டால் ,இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இதற்கு பொறுப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தான் என நிர்வாகம் கைவிரித்து விடும். கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஊழியர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். விலங்குகளை பராமரிப்பது என்பது எளிதான காரியமல்ல. காலி பணியிடங்களை நிரப்பினால் போதும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion