மேலும் அறிய

Chennai Metro Rail: சென்னை மக்களுக்கு திரில் பயணம் ரெடி.. டிரைவர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்கள்... எங்கு தெரியுமா?

சென்னனையில் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Metro Rail: சென்னனையில் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து,  விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. 

ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு சுமார் ரூ.61,843 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது.  மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய  மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் திட்ட மதிப்பு ரூ.61,843 கோடி ஆகும். 

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 138 மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத ரயில்களை வாங்க சிஎம்ஆர்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது, தொலைத் தொடர்பு அடிப்படையில் இயங்கும் ரயில் கட்டுப்பாடு அமைப்பு மூலம் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கான சிக்னல்களை அமைக்க ரூ.1,620 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அமைக்கப்பட்ட உடன் பல்வேறு சோதனைகள் நடைபெறும்.  இதற்கு உரிய அனுமதி அளித்த உடன் ரயில்களை இயங்கும் பணி தொடங்கும். இந்த சிக்னல் அமைப்பு மூலம் 1.30 நிமிட இடைவெளியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

எந்த வழித்தடம்?

மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி , மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களுக்கு ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ரயில்களுக்கான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் ரயில்கள் தயாராகிவிடும். பொதுபயன்பாட்டிற்கு வருதற்கு முன், சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும், முதற்கட்டமாக அடுத்த ஆண்டு இறுதியில் 26 ஓட்டுநர் இல்லாத ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே முதற்கட்டமாக அடுத்த ஆண்டு இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தலைப்பு செய்திகள்

சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget