மேலும் அறிய

சென்னை: சினிமா பாணியில் ரவுடியை சுட்டுபிடித்த பெண் எஸ்.ஐ.! காரணமும் சம்பவமும்!

சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்.ஐ.  துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்.ஐ.  துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பிடிக்க சென்றபோது தப்பியோடியதால் பெண்டு சூர்யாவை முழங்காலில் எஸ்.ஐ மீனா சுட்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

என்ன நடந்தது?

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் கொலை முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கு இருசக்கர வாகனத்தை கௌதம் என்பவர் இயக்கி வந்ததும் அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் சூர்யா என்கின்ற பெண்டு சூர்யா மற்றும் அஜித் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அக்கா வீட்டில் பதுங்கல்:

அப்போது பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அயனாவரம் அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனி படை போலீசார் திருவள்ளுவர் மாவட்டம் விரைந்து பென்டு சூர்யாவை கைது சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்பொழுது பெண்டு சூரியா தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்க இதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்திய பொழுது அங்கிருந்து பெண்டு சூரியா தப்பி ஓடி உள்ளார். அப்பொழுது தலைமை காவலர் அமுனுதீன் மற்றும் காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு இருந்த ஒரு கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது இந்த தாக்குதலில் அயனாவரம் தலைமை காவலர் அமானுதீன் மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காகவும் காவலர்களை பாதுகாக்கவும் உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் பேண்டு சூர்யாவின் முழங்கால்  பகுதியில் சுட்டு அவரை பிடித்துள்ளனர். 

பிடிபட்ட பெண்டு சூரியாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவலர்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற நியூ ஆவடி சாலை ஆர்டிஓ அலுவலகம் எதிரே உள்ள கரும்பு ஜூஸ் கடை அருகில் காவல் துறையின் தடையவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். 

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெண்டு சூர்யா மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் இதில் பெரும்பாலான வழக்குகள் போலீசாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி பதிவு செய்யப்பட்டது எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget