மக்களே உஷார்! 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.. கட்டிடக்கழிவுகளை சாலையில் கொட்டினால் இனி பிரச்னைதான்
கட்டிடங்கள் இடிக்கும் பணியின் போது தகரம் மூடுவது மட்டுமல்லாமல் துணிகளை வைத்து மூட வேண்டும். மாநகராட்சி விதிமுறை மீறி செயல்படும் கட்டிடம் பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சென்னையில் கட்டிடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
கட்டிடக்கழிவுகளை சாலையில் கொட்டினால் அபராதம்:
நெகிழி பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலைக்குழுக்கள் அடங்கிய பிரச்சார வாகனத்தினை மேயர் பிரியா இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மண்டல குழு தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய துணை மேயர் மகேஷ் குமார், "சென்னை மாநகராட்சி தூய்மையாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மாநகராட்சி மேற்கொண்டு வருவதற்கும் அதன் ஒரு தொடர்ச்சியாக தான் இந்தக் கட்டடக் கழிவுகளை அகற்றும் முறை.
கட்டிடக்கழிவுகளை தனியார் அமைப்பும் மற்றும் அரசு ஒப்பந்த நிறுவனங்களும் உரிய முறையில் அகற்றப்படவில்லை என்றால் கூட அபராத விதிக்கப்படும் அரசு ஒப்பந்ததாரர்கள் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மக்களே உஷார்:
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, "உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
அதே போன்று, ரிப்பன் மாளிகையிலும் அந்த பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கட்டடக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய மேயர், "இந்த மாதம் 21ஆம் தேதி இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. ஆகையால் தான் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தக் கட்டிடக்கழிவுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
இனி பிரச்னைதான்:
கட்டிடங்கள் இடிக்கும் பணியின் போது தகரம் மூடுவது மட்டுமல்லாமல் துணிகளை வைத்து மூட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளோம். மாநகராட்சி விதிமுறை மீறி செயல்படும் கட்டிடம் பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
10 ஆயிரம் மீட்டர் முதல் 25 ஆயிரம்மீட்டர் உள்ள கட்டிடங்கள் இருக்கும் போது அவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 500 முதல் 20 ஆயிரம் சதுர தூரமுள்ள கட்டிடங்கள் இருக்கும் பொழுது அவர்கள் விதியை பின்பற்றப்படவில்லை என்றால் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராத விதிக்கப்படும்.
குறைந்தபட்ச கட்டிடக்கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும். ஒரு மெட்ரிக் டன் கீழுள்ள கட்டிடக்கழிவுகள் பொதுமக்களை அகற்றிக் கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள கட்டிடக்கழிவுகளை மாநகராட்சி தொடர்புக்கு கொண்டு வாகனங்கள் மூலம் அகற்றலாம். கட்டிடக்கழிவுகளை அகற்றப்படாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் .
அபராதம் விதிப்பது மாநகராட்சி நோக்கமல்ல. சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளரிடம் கழிவுகள் இருந்தால் அதனை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கியும், அவர்களுக்கு 15 நாள் அவகாச கொடுக்கப்படும் அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கட்டிடக்கழிவுகளை அகற்றாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
15 மண்டலங்களில் மண்டலத்திற்கு ஒரு பகுதி என்று கட்டிடக்கழிவுகள் கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு டன்னுக்கு குறைவாக இருந்தால் பொதுமக்களை அங்கு கொண்டு கழிவுகளை கொட்டலாம்" என்றார்.





















