ஆசை வார்த்தை: Facebook காதலால் கர்ப்பமான பெண்! உல்லாசமாக இருந்து ஏமாற்றிய இளைஞர்
எம்.கே.பி நகர் பகுதியில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வதாக கூறி உறவு கொண்டு பின்னர் கருவை கலைக்க வைத்த நபர் கைது.

ஆசை வார்த்தை கூறி உறவு கொண்ட இளைஞர்
சென்னை பெருநகர காவல் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர் Facebook மூலம் அறிமுகமான சாமுவேல் சுமுக்கர் என்பவருடன் கடந்த 2024 ஆண்டு முதல் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல்சுமுக்கர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி , அப்பெண்ணுடன் உறவு கொண்டதின் பேரில் , அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.
கர்ப்பத்தை கலைக்குமாறு மிரட்டல்
பின்னர் சாமுவேல்சுமுக்கர் அப்பெண்ணிற்கு கர்ப்பதடை மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து , சாமுவேல்சுமுக்கர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து , அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து சாமுவேல்சுமுக்கருடன் பழகியபோது எடுத்த புகைப்படங்களை அழித்து விட்டு, அப்பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து விடுமாறு மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார்
இந்நிலையில் கர்ப்ப தடை மாத்திரைகளை சாப்பிட்ட அப்பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், ஏமாற்றிய சாமுவேல்சுமுக்கர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி W-18 எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-18 எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து , இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சுமுக்கர் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர். மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சாமுவேல்சுமுக்கர், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
வாடகைக்கு வீடு எடுத்து , பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது. 2 பெண்கள் மீட்பு
சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் சைதாப்பேட்டை , மசூதி பள்ளம் 2 வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது , அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.
அதன் பேரில் , பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனை செய்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஷ்வரி, ( வயது 53 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு கண்காணிப்பில் இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட புவனேஷ்வரி மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட புவனேஷ்வரி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.





















