Chennai Metro Train Service: சீரானது மெட்ரோ ரயில் சேவை - பச்சை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்!
Chennai Metro Train Service: சென்னை மெட்ரோ ரயில் சேவை பச்சை வழித்தடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையிலான பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பச்சை வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான சேவை தற்காலிகாக நிறுத்தப்பட்டுள்ளது.
விம்கோ நகர் - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில் வழிக்கம் போல ரயில் சேவை தொடர்கிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் சலுகை
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ள க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பயணிகள் நிறைவடைந்தால் மெட்ரோ இரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.