மேலும் அறிய

" என் மனைவியைக் கொன்று விட்டேன், கைது செய்யுங்க " செக்யூரிட்டி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, சுத்தியலால் அடித்துக் கொன்று போலீசில் சரணடைந்த கணவன்

கடன் - வீடு தேடி வந்து பிரச்சனை

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் ( வயது 68 ) இவரின் மனைவி சாந்தி ( வயது 54 ) கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ராஜேந்திரன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மேலும் சாந்தி தெரு தெருவாகச் சென்று புடவை வியாபாரம் செய்து வந்தார்.

பிசினஸிக்காக சாந்தி சிலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கடனை சாந்தி சரிவர கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பிரச்னையும் செய்து வந்தனர். அதனால் ராஜேந்திரனுக்கும் சாந்திக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

சுத்தியால் அடித்து கொலை

சாந்தியின் நடத்தையிலும் ராஜேந்திரனுக்குச் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலையில் ராஜேந்திரனுக்கும் சாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தூங்கி கொண்டிருந்த சாந்தியை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர், அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு வந்து , ஐயா என் மனைவியைக் கொலை செய்து விட்டேன். அவளின் சடலம் வீட்டிலிருக்கிறது. என்னைக் கைது செய்யுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

அதைக்கேட்ட போலீஸார், ராஜேந்திரனை அழைத்துக் கொண்டு அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் சாந்தி சடலமாகக் கிடந்தார். இதையடுத்து சாந்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மனைவியைக் கொடூரமாக சுத்தியலால் அடித்துக் கொலை செய்த குற்றத்துக்காக ராஜேந்திரனைக் கைது செய்தனர்.

இது குறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில் ; 

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரின் முதல் மனைவி இறந்து விட்டார். இவர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது தான் கணவரை இழந்த சாந்தியுடன் ராஜேந்திரனுக்குப் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

சாந்திக்கு முதல் கணவர் ஏகாம்பரத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த வயதில் சாந்தி மீது ஏற்பட்ட சந்தேகம். அவர் வாங்கிய கடன் தொல்லை ஆகிய காரணங்களால் அவரைக் கொலை செய்தததாக ராஜேந்திரன் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget