மேலும் அறிய
Advertisement
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. பதறிய பயணிகள்.. அதிகாரிகள் கொடுத்த ட்விஸ்ட்..
அதிரடி படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவக் குழுவினர், போலீசார் அனைவரும் அமைதியாக, தங்களுடைய வாகனங்களுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்
சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான, பாதுகாப்பு ஒத்திகை திடீரென நடந்ததால், சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ( Chennai News ) : சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை, திடீரென பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள அடையாறு ஆற்று பகுதி வழியாக, தீவிரவாதிகள் சிலர் உள்ளே புகுந்து விட்டதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. அதோடு விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டன.
தீயணைப்பு படை குழுவினர்
இதை அடுத்து விமான நிலைய அதிரடிப்படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீஸ் அதிரடி படையினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன பாதுகாப் அதிகாரிகள், தீயணைப்பு படை குழுவினர், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் உட்பட அனைவரும், சென்னை விமான நிலைய ஓடு பாதைகளுக்கு பின்புறம், பழுதடைந்த பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அதிரடிப்படை வீரர்கள்
அங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பிச்சு அடித்து, தீயை அவசரமாக அனைத்தனர். அதோடு கீழே விழுந்து கிடந்த சிலரை, மருத்துவ குழுவினர், அவசர அவசரமாக தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைத்தனர். அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகளுடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த பரபரப்பு அடுத்த சில நிமிடங்களில் ஓய்ந்தது. அதிரடி படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவக் குழுவினர், போலீசார் அனைவரும் அமைதியாக, தங்களுடைய வாகனங்களுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
பாதுகாப்பு ஒத்திகை
அதன் பின்பு தான் தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்தில் நடந்தது, பாதுகாப்பு ஒத்திகை என்று. தீவிரவாதிகள் யாராவது விமான நிலையத்திற்குள், சதி செய்யும் நோக்கத்துடன், புகுந்து விட்டால், உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து, தீவிரவாதிகளை மடக்கி பிடிப்பதோடு, விமானங்கள், பயணிகள், ஊழியர்கள் அனைவரையும் எப்படி பாதுகாப்பது, என்று விமான நிலையத்தின் அனைத்து பிரிவினர், மற்றும் சென்னை மாநகர போலீஸ் ஆகியோர் இணைந்து, இந்தத் திடீர் பாதுகாப்பு ஒத்திகையை தத்ரூபமாக நடத்தி உள்ளனர். இது திடீரென நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என்பது, விமான நிலையத்தில் உள்ள பலருக்கு தெரியாததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு, அதன் பின்பு அமைதியாகியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion