மேலும் அறிய
விமான நிலையமா பேருந்து நிலையமா ? குவியும் பொதுமக்களால் டிக்கெட் விலை உயர்வு..!
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பயணிகள் பலர், விமானங்களில் பயணம் மேற்கொண்டு உள்ளதால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

சென்னை விமான நிலையம்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பயணிகள் பலர், விமானங்களில் பயணம் மேற்கொண்டு உள்ளதால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை அடுத்து சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமான டிக்கெட் கட்டணங்கள், இன்றும், நாளையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.
தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்களிலும் கூட்டம் நிறைந்து வழிகிறது. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும், ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர்.எனவே தனியார் ஆம்னி பஸ்களில், டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.

இதை அடுத்து விமானங்களில் பயணித்தால், பயண நேரம் குறைவு, சொந்த ஊரில் குடும்பத்தாருடன், கூடுதல் நேரம் இருந்து, பண்டிகையை கொண்டாடலாம் என்று, பயணிகள் பலர் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர்.இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவைக்கு செல்லும் விமானங்களில், அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் வெள்ளி, சனி ஆகிய, இன்றும் நாளையும் இரு தினங்கள், இந்த விமானங்கள் அனைத்திலும், பெரும்பாலான டிக்கெட் விற்பனை ஆகிவிட்டன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட்கள் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.
சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,390. இன்று நாளை, வெள்ளி, சனி கட்டணம் ரூ.11,504.
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,273. இன்று நாளை வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,287.
சென்னை- கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,709.
சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,190. வெள்ளி சனி கட்டணம் ரூ.13,086.
சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,314. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,415.
இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை, கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான டிக்கெட் கட்டணத்தை பற்றி யோசிக்காமல், போட்டிப்போட்டுக் கொண்டு, விமான டிக்கெட்கள் வாங்கிக் கொண்டு, பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் கூட்டம் பெருமளவு அலை மோதுகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion