மேலும் அறிய

Chembarambakkam Lake : மீண்டும் தொடங்கிய மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

Chembarambakkam Lake Water Level: தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி -

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. 

செம்பரபாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 13.97 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 1.348 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை 300 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை முன்னெச்சரிக்கை என்ன ?

19.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு: 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Kandha Shasti Festival: அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Kandha Shasti Festival: அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்
Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
Embed widget