மேலும் அறிய

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு

’’சந்த் கபீர் விருது நெசவுத்துறையின் உயரிய விருதாக கருதப்படுகிறது’’

சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு சந்த்கபீர்  தேசிய விருதை  மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள நகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஆண்டு தோறும் பட்டுச்சேலைகளில் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்கிறது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
கைத்தறி விருதுகளில் முதன்மையான விருதாக கருதப்படும் 2018ஆம் ஆண்டுக்கான சந்த் கபீர் விருது ஒருவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது 4 பேருக்கும் என காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டிய பின்னர் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறியது, நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான சந்த் கபீர் விருது இந்த ஆண்டு காஞ்சிபுரத்துக்கு கிடைத்திருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான இந்த விருதை காஞ்சிபுரம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பி.கிருஷ்ணமூர்த்தி (61) பெறவுள்ளார். இந்த விருதுடன் ஒரு தங்க நாணயம், 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், 10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை,பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப்பத்திரம், 3 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியன வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
சிறந்த நெசவாளர் என்ற முறையில் இவ்விருது கிடைத்துள்ளது. மத்திய,மாநில அரசுகளிடமிருந்து ஏற்கனவே விருது பெற்றிருந்தால் மட்டுமே இந்த உயரிய விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியும். இவரை தவிர மேலும் 4 பேர் தரமான கோர்வை ரக பட்டுச்சேலை வடிவமைத்தமைக்காக சிறந்த நெசவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெறுகிறார்கள். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த காமாட்சி, ஹரி, தர்மலிங்க நகரைச் சேர்ந்த சரளா-கணபதி தம்பதி, சிறந்த பட்டுப்புடவையை வடிவமைத்தமைக்காக இவ்விருது இரு தம்பதியர்களுக்கும் இணைத்து தனித்தனியாக வழங்கப்படவுள்ளது. அதே போல காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த ருக்மணி கண்ணியவேல் (49) காஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ள தெருவைச் சேர்ந்த ஏ.ஹரி (54) உட்பட இவர்கள் 4 பேரும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
இவ்விருதுடன் 4 பேருக்கும் தலா 1.50 லட்சம், 10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை 1, ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், நெசவாளர் பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப்பத்திரம் ஆகியனவும் வழங்கப்படும். தமிழகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே சிறந்த சிறந்த நெசவாளர்களுக்கான 5 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கப்படுவது தாமதமாகி இருந்தது. இவ்விருதுகள் புது தில்லியில் விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட இருப்பதாகவும் ஆர்.சசிகலா தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
இப்படியே போனால் சென்னைக்கு ஆபத்து! கூவம் போல மாறும் புழல் ஏரி - அரசுக்கு வீரபாண்டியன் அவசர அலர்ட்
இப்படியே போனால் சென்னைக்கு ஆபத்து! கூவம் போல மாறும் புழல் ஏரி - அரசுக்கு வீரபாண்டியன் அவசர அலர்ட்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget