மேலும் அறிய
Advertisement
Aadi Pooram: பல்லவர் கால அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கோலாகலம்..! கருவறையில் பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்..!
ஆடிப்பூரம் விழாவையொட்டி உத்திரமேரூர் பல்லவர் கால துர்க்கை அம்மனுக்கு 501 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பல்லவர் கால துர்க்கை அம்மன்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பல்லவர் காலத்தை சார்ந்த பழமையான துர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பெண் பக்தர்கள் விரதம் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
501 பெண் பக்தர்கள்
அந்த வகையில் இன்று 33-வது ஆண்டாக துர்க்கை அம்மன் ஆலயத்தில் சீரும் சிறப்புமாக பாலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி உத்திரமேரூர் , பஜார் வீதியில் அமைந்துள்ள முத்து பிள்ளையார் கோவிலில், 501 பெண் பக்தர்கள் ஒரேமாதிரியான சீருடை அணிந்து தங்களது தலைகளில் பால் குடங்களை சுமந்து மங்களவாத்தியங்கள் மற்றும் தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.
கைகளாலே பாலபிஷேகம்
இந்த ஊர்வலம் பஜார் வீதி மற்றும் முக்கிய பிரதான வீதிகளின் வழியாக சென்று துர்கையம்மன் ஆலயத்தை அடைந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் தாங்கள் விரதம் இருந்து கொண்டு வந்த பாலை மூலவருக்கு கருவறைக்கு சென்று , தங்கள் கைகளாளேயே பாலபிஷேகம் செய்தார்கள். பின்னர், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் மகளிர் வார வழிபாட்டு மன்றம், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடிப்பூரம் ( aadi pooram )
ஆடி என்றாலே திருவிழா என்பதுதான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் . அந்த அளவிற்கு ஆடி மாதம் முழுவதும் பல முக்கிய நாட்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் பொழுது கொண்டாடப்படுகிறது. இது அம்மனுக்குரிய திருநாளாக கருதப்படுகிறது. ஆடி மாத வரும் பூச நட்சத்திரத்தில், இந்த விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.
ஆடி மாதம் பூச நட்சத்திரத்தில் அம்மனுக்குரிய விசேஷ தினமாக கருதப்படுவதால், முனிவர்களும், சித்தர்களும், ஞானிகளும் இந்த நாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் பல புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இதே ஆடிப்பூர நட்சத்திரத்தின் பொழுது , தான் பூமாதேவி ஆண்டாளாக, அவதாரம் எடுத்தாள் என புராணங்கள் விளக்குகின்றன. இதன் காரணமாக வைணவ தளங்களிலும் ஆடிப்பூரும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்படுவது மட்டுமில்லாமல் பால்குடம் எடுத்தால், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion