மேலும் அறிய

Chennai News ; திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த இளைஞர்

சென்னையில் நடந்த பல்வேறு சம்பவங்களை கீழே காணலாம்

திருமணம் செய்து கொள்வதாக , ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் உல்லாசம்

சென்னை சூளைமேடைச் சேர்ந்த 28 வயது பெண், கடந்த மார்ச் மாதம் அண்ணா நகர் அனைத்து மகளிர் நிலையத்தில் காவல் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது ;

திருமணத்திற்கு வரம் தேடி கடந்த 2024 ஆம் ஆண்டு தனியார் மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தேன். அப்போது சூர்யா என்ற ரோஷன் என்பவர் அறிமுகமானார். என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி , கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்து , வலுக் கட்டாயமாக உல்லாசமாக இருந்தார்.

பழகிய புகைப் படங்களை காட்டி மிரட்டல்

இருவரும் சேர்ந்து வீடு வாங்கலாம் எனக் கூறி 8.20 லட்சம் ரூபாய் , ஒன்பது சவரன் நகை , மொபைல் போன் , லேப்டாப் உள்ளிட்டவை வாங்கினார். திடீரென தலைமறைவானார். சந்தேகம் எழவே , மோசடி அவர் குறித்து தீர விசாரித்த போது மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து அவரை கேட்டால் பழகிய போது எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து அண்ணா நகர் போலீசாரின் விசாரணையில் , 

இச்சம்பவ வழக்கில் தேடப்பட்டு வந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சூர்யா ( வயது 28 ) சிவில் இன்ஜினியர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர், இதே பாணியில் பல பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து மோசடி செய்துள்ளார். அந்த வகையில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் , கானத்துாரில் ஒரு பெண்ணை மோசடி செய்த வழக்கில் , சிறைக்கு சென்று , ஜாமினில் வெளிவந்துள்ளார்.

அதன் பின்னும் , மேலும் பல பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ள திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த  சூர்யாவை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

ஷெனாய் நகர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியவர் , போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று, பாலத்தில் இருந்து குதித்த போது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரிடமிருந்து கார், மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், இவரது மோசடி வலையில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வாகன சோதனையின் போது , கீழே தள்ளியதால் உயிரிழந்த தனியார் நிதி நிறுவன அதிகாரி

சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் கரம் சந்த் காமராஜ் ( வயது 30 ) இவர் தி.நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பிரிவு மண்டல தலைவராக உள்ளார். இவர் தனது காரில் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்கப்பூர் ஷாப்பிங் நிறுவனம் ஒட்டு எதிரே செம்பியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

காமராஜின் காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவர் மது அருந்தி உள்ளாரா என சோதனை செய்துள்ளனர். பரிசோதனை கருவியில் மது அருந்தியதாக காட்டியதால் காரை விட்டு இறங்குமாறு கூறிய போலீசார் அபராதம் விதிக்க முயன்றுள்ளனர். அப் போது போலீசாருக்கும் , காமராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திடீரென போலீசார் கீழே தள்ளியதாகவும், அந்த அதிர்ச்சியில் காமராஜ் மயக்க நிலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த போலீசார் காமராஜின் மொபைல் போன் வாயிலாக, அவரது மகன் குருசரண்ராஜ் ( வயது 21 ) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த குரு சரண்ராஜ் ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். ஆம்புலன்ஸில் வந்தவர்கள் பரிசோதித் து விட்டு காமராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கிருந்த மருத்துவர்களும் காமராஜ் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். செம்பியம் போலீசார் காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாருக்கும் , காமராஜீக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும் , இதில் ஆத்திரமடைந்த போலீசார், காமராஜை தாக்கி கீழே தள்ளினர். இதை நான் பார்த்தேன் என தூய்மை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget