மேலும் அறிய

வெட்டப்பட்ட மரங்கள்..மாலை, பாலுடன் வந்து அஞ்சலி செலுத்திய பசுமைத்தாயகம்..

"பசுமை தாயகம் அமைப்பினர், வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது "

செங்கல்பட்டு மாவட்டம் கீரல்வாடி என்ற கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி  செலுத்திய பசுமை தாயகத்தினர்.

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை  கிழக்கு கடற்கரைச் சாலை,  கடலூர் கிராமம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ள ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்
வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மரங்களை வேரோடு பிடிங்கி மாற்று இடம் பள்ளி கூடம், குளம், பூங்காக்கள், நீர் பிடிப்பு பகுதியில் நட வேண்டியும் - செங்கல்பட்டு  பசுமைத்தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (02.09.2023) கீரல்வாடி கிராமத்தில் நடைபெற்றது.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்
வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

இதில் பசுமைத்தாக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு, மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மரத்திற்கு இறுதி அஞ்சலி, செலுத்திய சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படங்கள்

மரத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பசுமைத்தாயகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஓட்டகோயில் நா.சுரேஷ் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் பசுமைத் தாயகம், மாநிலத் துணைச் செயலாளர் ஐ .நா.கண்ணன், செங்கற்பட்டு தெற்கு மாவட்ட பசுமைத் தாயகம் ஆலோசகர் கி. குமரவேல் மற்றும் மோகனரங்கம் , அன்பு, வினோத்குமார், கிளியா நகர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்
வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

பசுமைத் தாயகம் சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில், வைரலாக பரவி வருகிறது. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, நிறைய மரங்கள் நட வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்து வருகிறார். மரங்களுக்கு அஞ்சலி செலுத்துவது , மனிதத்தன்மையின் உச்சம் எனவும் பதிவு செய்து வருகின்றனர்.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் 60 ஆண்டுகள் பழமையான  ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பாமகவினர் மற்றும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில், ஈடுபட்டதை தொடர்ந்து  வெட்டப்பட்ட ஆலமரம், வேறு இடத்தில் நடப்பட்டு துளிர்விடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Embed widget