சென்னை ; 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! இரண்டாவது கணவர் கைது , அதிர்ச்சி புகார்
தன் இரண்டாவது கணவர் , மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் காவல் நிலையத்தில் புகார்.

சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது கணவர் கைது.
சென்னை அம்பத்துார் காவல் சரக்கத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு 10 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, தன் முதல் கணவரை பிரிந்து , மூர்த்தி ( வயது 42 ) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இளம் பெண் மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் இரண்டாவது கணவர் மூர்த்தி முதல் கணவருக்கு பிறந்த 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்படி போலீசார் மகளிர் மூர்த்தியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் சிறுமியிடம் பாலியல் அத்து மீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மகளிர் போலீசார் குழந்தை பாலியல் வன் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை , போலீசார் கைது செய்தனர்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 - ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டருகே வசிக்கும் குணசேகர் ( வயது 37 ) என்பவர் சிறுமிக்கு ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி , ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட புது வண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வீடு வாங்கி தருவதாக கூறி 6.50 லட்சம் மோசடி
சென்னை வியாசர்பாடி கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அம்பத்ராஜ் ( வயது 31 ) மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவருக்கு வேளாண்மை உழவர் நலத்துறையில் பணிபுரியும் சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த சரவணன் ( வயது 53 ) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
சரவணன் அம்பத்ராஜுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு வாரிய வீடுகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை இதை நம்பிய அம்பத்ராஜ் கடந்த 2023 மார்ச் 6 - ம் தேதி தனக்கு தெரிந்த சசிகலா, சதீஷ், ரேகா, புவனேஸ்வரி ஆகியோரிடம் 6.50 லட்சம் ரூபாய் பெற்று சரவணனிடம் கொடுத்துள்ளார்.
இரண்டரை ஆண்டுகளாகியும் சரவணன், வீடு வாங்கி கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரிடம் அம்பத்ராஜ் புகார் அளித்தார்.
அவரது , உத்தரவின் படி கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலக உதவியாளராக பணிபுரியும் சரவணனை கைது செய்தனர்.




















