மேலும் அறிய

TN Rain alert: அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா மக்களே?

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரங்களில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். நாளை காலை தெற்கு ஆந்திரா வட தமிழ்நாடு புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காலை 0530 மணி அளவில் காரைக்கால் இருந்து கிழக்கு - வடகிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை  கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

 இதனால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், பெரம்பலூர் நாமக்கல் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

TN Rain alert: அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா மக்களே?

நவம்பர் 21 - 22 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று விழுப்புரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் ஆகிய மாவட்டங்களில் 22ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று சென்னை திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை 22ஆம் தேதி வேலூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிறர் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

தலைப்பு செய்திகள்

TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ECR சாலையில் அதிரடி மாற்றம்! 75% பணிகள் நிறைவு.. 2027 மார்ச்சில் என்னென்ன வசதிகள் வரும்?
ECR சாலையில் அதிரடி மாற்றம்! 75% பணிகள் நிறைவு.. 2027 மார்ச்சில் என்னென்ன வசதிகள் வரும்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா

Embed widget