மேலும் அறிய

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

’’இறந்தவர்களின் உடலை புதைத்து அவ்விடத்தில் அவர் நினைவாகவும்  அடையாளத்திற்க்காகவும்  தரையின்மேற்பரப்பில்  பெரிய பெரியபாறை கற்களை வட்டமாகநட்டு வைத்து  ஈமச்சின்னங்களாக அமைத்தனர்’’

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை  கள ஆய்வின்பொழுது உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
 
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது கல் வட்டங்கள் என்பவை பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும்  அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையின் போதோ வயது மூப்பின் காரணமாகவோ நோய்வாய்ப்பட்டோ இறக்க நேரிட்டால் இறந்தவர்களின் உடலை புதைத்து அவ்விடத்தில் அவர் நினைவாகவும்  அடையாளத்திற்க்காகவும்  தரையின்மேற்பரப்பில்  பெரிய பெரியபாறை கற்களை வட்டமாகநட்டு வைத்து  ஈமச்சின்னங்களாக அமைத்தனர். இதற்க்கு கல்வட்டம் என்று பெயர். இது அமைவதனால்  பிற்காலத்தில் இறந்தவர்களை புதைப்பது இங்கு தவிர்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
 
சில பகுதிகளில் இந்த கல் வட்டங்களின் கீழ் பெரிய பெரிய தாழிகளில் இறந்தவர்களின் உடலை வைத்தும் அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்தும் புதைத்து வைத்திருப்பார்கள் சுருங்கச்சொன்னால் இன்றைய சமாதிகள் அமைத்து கொண்டிருப்பதற்க்கு இதுதான் துவக்கமாக இருக்கும் என கருதலாம். மனிதர்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகள் ஒட்டிய பகுதிகளிலும் மலைச்சரிவுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன. இந்தக் குறும்பிறைமலைக் குன்றில் பத்துக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் அடுத்தடுத்து காணப்படுகின்றன  அவை ஒவ்வொன்றும் 5 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
 
மேலும் இதற்கு அருகிலேயே உள்ள பைரவர் குன்றிலும் சில கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நாங்கள் இக்கிராமத்திற்க்கு அருகில் உள்ள எடமிச்சி கிராம் சின்னமலையிலும் அருகருகே ஐந்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகள் மற்றும் கல்வட்டங்களை  கண்டறிந்தோம்  எனவே  இப்பகுதி அனைத்தும் அக்காலத்தில் ஒரே பகுதியாக இருந்திருக்கலாம் பெருங்கற்காலத்தில் மனிதர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கவாய்ப்புள்ளது எனக்கருதலாம். தற்பொழுதும் இந்தப் பகுதி இங்கு வாழும் மக்களின் சுடுகாடாகவும் இடுகாடாகவும் பயன்பட்டு கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
 
இந்த கல்வட்டங்கள் சுமார் 2500 ஆண்டில் இருந்து 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து இவ்வூர் மிகப்பழமையான ஊர் என்பதும் இவ்வூரில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவ்வளவு பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வட்டங்களில் பலவற்றில் முட்செடிகள் சூழப்பட்டும் சில சிதைந்து அழியும் தருவாயில் உள்ளன.
 
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
 
எனவே தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இவ்விடத்தை ஆய்வு மேற்கொண்டு அவைகளை அடையாளப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget