மேலும் அறிய

சென்னை விமான நிலையத்தில் நூதன முறை கடத்தல்! - ரூ.82.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் !

பசை வடிவிலான தங்கமும், தங்கக் கட்டியும் இருப்பது தெரியவந்தது.

சென்னை விமான நிலையத்தில் சூடான் நாட்டை சேர்ந்த  பயணி ஒருவரிடம் இருந்து ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையமாக கருதப்படுவது சென்னை விமான நிலையம். உள்ளூர் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை  சார்ஜாவில் இருந்து வரும் சூடான் நாட்டை சேர்ந்த  பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த நபரை அடையாளம் கண்ட விமான நிலைய சுங்கத்துறைனர் சோதனை செய்தனர் . அப்போது அந்த நபரிடம் நூதன முறையில் பசை வடிவிலான தங்கமும், தங்கக் கட்டியும் இருப்பது தெரியவந்தது. தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 1.85 கிலோ கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு  ரூ.82.41 லட்சம் என  சென்னை சர்வதேச  விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் நூதன முறை கடத்தல்! - ரூ.82.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் !
இதே போல கடந்த வாரம் திருச்சி விமான நிலையத்திலும்  தங்கம் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.  கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவகி என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான 318 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.  அதே நாளில் விழுப்புரத்தை சேர்ந்த கணேசன் என்ற பயணி தனது உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.32 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான 631 கிராம் தங்கக்கட்டியை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து இயல்பாக தங்கம்  கடத்தல் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு சில பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் என்ன நடக்கிறது? பாதுகாப்புகள் குறைபாடா? கடத்துவதற்கு அதிகாரிகள் துணையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக  இந்த மாத தொடக்கத்தில் மட்டும்  சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget