மேலும் அறிய

செங்கல்பட்டில் 3.59 லட்சம் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு..! முழு விவரம்

Pongal Parisu Thogai 2024

Pongal Parisu Thogai 2024

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பயணாளர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதி நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும், இந்த வெள்ளிக்கிழமை (12 ஆம் தேதி) ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயணாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்ட நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை  காட்டாங்குளத்தூர=ஒன்றியத்தில் சுமார் 63412  அட்டைதாரர்களுக்கும்,திருப்போரூர் ஒன்றியத்தில் 45 ஆயிரத்து 526 அட்டைதாரர்களுக்கும்,  திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் 52205 அட்டைதாரர்களுக்கும்,  மதுராந்தகம் மற்றும் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 81908 அட்டைதாரர்களுக்கும்,  இலத்தூர் சித்தாமூர்   ஒன்றியத்தில் 62687 அட்டைதாரர்களுக்கும்,  வண்டலூர் ஒன்றியத்தில் 54 ஆயிரத்து 255 அட்டைதாரர்களுக்கும்  வழங்கப்படுகிறது.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றியத்தில் மொத்தம் மூன்று லட்சத்து 59 ஆயிரத்து 993 அட்டைதாரர்கள்  பயனடைய உள்ளனர். 841 நியாயவிலைக் கடைகளுடன் இணைந்த பொங்கல் பரிசு பெற தகுதிவாய்ந்த 3,59,993 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்குவதற்கு தமிழக அரசால் ரூ.39.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரப்பாக்கம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசுகளை வழங்கிய அமைச்சர் அன்பரசன் 
 
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கின
 
தமிழ்நாடு அளவில் அனைத்து அரிசி பொறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.2429.05 கோடி வழங்கி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.  

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்

அளவு

மதிப்பு (ரூ.கோடியில்)

பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை

1,86,41,423

குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம்

18,641 மெட்ரிக் டன்

ரூ.

65.62

கோடி

ஒரு கிலோ சர்க்கரை வீதம்

18,641 மெட்ரிக் டன்

ரூ.

75.71

கோடி

ஒரு குடும்ப அட்டைக்கு  ஒரு முழு  கரும்பு  வீதம்

1,86,41,423 கரும்புகள்

ரூ.

61.52

கோடி

ரொக்கம் ரூ.1000/- வீதம்

1,86,41,423 எண்ணிக்கை

ரூ.

1864.14

கோடி

மொத்தம்

ரூ.

2066.99

கோடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget