Train Cancel: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் சேவை ரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! முழு தகவல்!
Chengalpattu Train Cancel: "பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை -செங்கல்பட்டடத்தில் 12 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது"

"சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது"
சென்னை மின்சார ரயில் சேவையில் முக்கியத்துவம்
சென்னையில் தினமும் சுமார் 8.5 லட்சம் மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் பணிபுரிபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள், பிற தேவைக்காக சென்னைக்கு வருபவர்களுக்கு இது ஒரு அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது.
சென்னை நகரின் போக்குவரத்து நெருசலை குறைக்க மின்சார ரயில்கள் பெரும் உதவி புரிகின்றன. சென்னை மின்சார ரயில் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை சேரும் இடங்களுக்கு கொண்டு செல்கிறது. மின்சார ரயிலில் செல் செலவு குறைவு என்பதால், தினமும் சென்னைக்கு செல்பவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி போன்ற பல்வேறு வழித்தடங்களில் தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் ரயில் சேவை இருந்து வருகிறது. அவ்வப்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படும்போது, பயணிகள் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து - Chengalpattu Electric Train Cancel
ரயில் பாதை மேம்பாட்டு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு தடத்தில் 12 மின்சார ரயில்கள் இன்று (04-06-2025) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் இன்று மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரத்து செய்யும் ரயில்கள் விபரம்
காலை 9:55 மணிக்கு செங்கல்பட்டு -கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:40 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
காலை 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1:10 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்படும் ரயில்கள்
காலை 8:31 மணிக்கு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டும் இயக்கப்படும்.
காலை 9:02 மணிக்கு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டும் இயக்கப்படும்.
காலை 9:31 மணிக்கு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டும் இயக்கப்படும்.
காலை 9:51 மணிக்கு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டும் இயக்கப்படும்.
காலை 10:56 மணிக்கு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டும் இயக்கப்படும்.
காஞ்சிபுரம் முதல் சென்னை கடற்கரை வரை காலை 9:30 மணிக்கு செல்லும் ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
பயணிகளுக்கு வேண்டுகோள்
செங்கல்பட்டு இடத்தில் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து, சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை காலை 11:30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை மதியம் 1:23 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.





















