கையில் கட்டையுடன் வந்த அதிமுகவினர்.. சாராயப் பானை, சாராயப் பாக்கெட்டுகள்.. பரபரத்த அதிமுக போராட்டம்
Chengalpattu News : செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாராயப் பானை மாதிரி வடிவத்தை அடித்து நொறுக்கியும் மற்றும் சாராயப் பாக்கெட்டுகளை மாலை போல் அணிவித்தும் , நூதன முறையில் அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டது.
செங்கல்பட்டு அதிமுக போராட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. அதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்ததற்க்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க்க வேண்டும், விஷ சாராயம் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் இனி விஷ சாராயம் முழுமையாக தடை செய்ய வேண்டும்.அதிமுக ஆட்சியின் போது இதே திமுக கட்சியை சேர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் கரும்புச்சட்டை அணிந்து மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையா என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷம்
மேலும் பேசுகையில், நாங்கள் பேசுவதை வீடியோ எடுத்து பதிவு செய்யும் காவல்துறை எங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் காவல்துறை ஏன் அவர்கள், காவல் நிலையம் அருகே நடந்த சாராய வியாபாரத்தை உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி வளர்மதி மேடையில் பேசினார். தமிழக அரசிற்கு எதிராக கோஷமிட்டபடி கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
இதேபோன்று போராட்டத்திற்கு வந்திருந்த அதிமுகவினர் சாராய பானையைப் போராட்டத்திற்கு கொண்டு வந்து அதை அடித்து நொறுக்கினர். மேலும் சாராய பாக்கெட்டுகளையும் மாளிக அணிவித்து வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்ததால் திறந்தவெளி மேடை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.