Guduvancheri Power Shutdown: கூடுவாஞ்சேரியில் நாளை பவர் கட்.. சமாளிக்க தயாராக இருங்கள் மக்களே.. எங்கெங்க தெரியுமா ?
Guduvancheri Power Shutdown Tommorow: கூடுவாஞ்சேரில் 15-05-2025 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி உப கோட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கூடுவாஞ்சேரியில் எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை ?
நாளை பராமரிப்பு பணி காரணமாக 33/11. கே.வி துணை மின் நிலையத்தில், அத்வானி டவுன் மின்னூட்டியில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என்பதால், இந்த மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், சுவாதி நகர், சாய் எம்பையர், அண்ணா நகர், ஸ்ரீராம் சங்கரி குடியிருப்பு, அன்னை அரவிந்த் நகர், லட்சுமி நகர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலே கூறிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெரிய தெரு, ஜெய் பீம் நகர், மேட்டு தெரு, பிராமண நகர், மல்லீஸ்வரர் கோயில் தெரு, சின்ன குளக்கரை தெரு, செங்கழிணி அம்மன் கோயில் தெரு, கற்பகம் பால் நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.





















