Crime: பாத்ரூமில் ரகசிய கேமரா..! குளியல் வீடியோவை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்..! இளைஞரை சிறையில் தள்ளிய போலீஸ்..
வீடியோவை தெரியாத எண்ணில் இருந்து அந்த பெண்ணுக்கு அனுப்பிய இளைஞர் அவரை மிரட்டியுள்ளார்.
தன்னுடன் நெருங்கி பழகவில்லை என்பதால், தனது அந்தரங்க வீடியோவை வைரலாக்கிவிடுவேன் என மிரட்டியதாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, பெங்களூருவில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அடையாளம் அறியப்படாத அந்தப் பெண் போலீஸில் அளித்துள்ள புகாரின்படி, அந்த இளைஞர் தன்னை தனிப்பட்ட முறையில் வீடியோ எடுத்ததாகவும், பின்னர் அவருடன் உடலுறவு கொள்ளுமாறு தன்னை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்:
அந்த இளைஞர் பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர். அவர் பெயர் நிரஞ்சன் என அடையாளம் காணப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். குளியலறையில் கேமராவை வைத்து அந்த பெண்ணை வீடியோ படம் பிடித்து அந்த இளைஞர் மிரட்டியுள்ளார்.
அந்த வீடியோவை தெரியாத எண்ணில் இருந்து அந்த பெண்ணுக்கு அனுப்பிய இளைஞர், தன்னுடன் உடலுறவு கொள்ளாவிட்டால், ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கேட்டு மிரட்டியுள்ளார்.
தென்மேற்கு சிஇஎன் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அந்தப் பெண் தனது புகாரை பதிவு செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 4 ஆண்டுகளாக பொம்மனஹள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார்.
போதை ஆசாமி:
குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளருடன் நட்பு கொண்டிருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.இதன்மூலம்தான் அவர் தனது குற்றத்தையும் அரங்கேற்றியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், அவரது மொபைல் போனில் அவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைப்பதாகத் தோன்றும் செயலி இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் அவரது மொபைலில் இருந்து மேலும் மூன்று இளம் பெண்களின் வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த திடுக்கிடும் சம்பவத்தால் பெங்களூரு நகரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.