மேலும் அறிய
யுகாதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணத்தில் 50% தள்ளுபடி
யுகாதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும், நாளையும் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி படம்
தெலுங்கு மொழி பேசும் மக்கள் இன்று யுகாதி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் நாளை தமிழ் புத்தாண்டை கொண்டாட உள்ளனர். இரண்டு பண்டிகைகளுக்கும் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த இரண்டு பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















