Thirteen Lives Review: இப்படி ஒரு உண்மைக் கதை உண்மையில் பிரமிப்பு தான்... ஏன் பார்க்க வேண்டும் ‛தார்டின் லைவ்ஸ்’?
அவர்கள் மீட்கப்பட்டார்களா? புதிய திட்டம் கை கொடுத்ததா? அவர்களை மீட்க கிராம குழுவினர் செய்ய ஒத்துழைப்புகளுக்கு பலன் கிடைத்ததா? என்பது தான் கதை.
Ron Howard
Viggo Mortensen, Joel Edgerton, Tom Bateman, Teeradon Supapunpinyo
நல்ல அட்வென்சர் மூவி பார்க்கலாம், நல்ல த்ரில்லர் மூவி பார்க்கலாம், நல்ல க்ரைம் மூவி பார்க்கலாம், சில நேரங்களில் நல்ல டிராம மூவி கூட பார்க்கலாம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த படத்தை என்றாவது தான் பார்க்க முடியும். அந்த வகையில், நீங்கள் மேலே கூறிய ஜெனர்களின் காதலர் என்றால், கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம், ‛தார்டின் லைவ்ஸ்’ .
தாய்லாந்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்குகிறது கதை. கொள்ளை அழகு என்பதற்கு சரியான உதாரணம், அந்த காட்சிகளாக தான் இருக்க முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாயம், விவசாயப்பயிர்களை சுற்றி மலைகள் என முழுக்க இயற்கை சார்ந்த ஒரு கிராமத்தில், சிறுவர்கள் கால்பந்த அணியின் சிறுவன் ஒருவருக்கு பிறந்தநாள். அன்று இரவு அவனது வீட்டில் அனைவருக்கும் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதற்குள், அங்குள்ள குகைக்குள் சென்று வர பயிற்சியாளர் உள்ளிட்ட 13 பேர் கொண்ட அந்த அணி திட்டமிடுகிறது. அந்த மலை குகையை அடையும் அவர்கள், அதன் உள்ளே சென்றதும், கனமழையால் குகைக்குள் வெள்ளம் வந்து விடுகிறது. மாலை ஆகியும் குழந்தைகள் வராமல் தவிக்கும் பெற்றோர், அவர்களை தேடி மலை குகைக்கு வருகிறார்கள். அங்கு அவர்களின் சைக்கிள்கள் நிற்கிறது; குழந்தைகளை காணவில்லை.
View this post on Instagram
உடனே விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாக கிளம்புகிறது. மாகாண கவர்னர் பொறுப்பில், 13 பேரை மீட்க முழுவீச்சில் தயாராகிறது அரசு இயந்திரம். தாய்லாந்து கடற்படை தீவிரமாக தேடிக் கொண்டிருக்க, 17 நாடுகளசை் சேர்ந்த பல்வேறு ஸ்குபா டைவிங் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் பணி நடக்கிறுது.
குகைக்குள் நுழைவதே கடும் சவாலாக மாறும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு முயற்சிகளும் தோல்வி அடைகின்றன. நாட்கள் கடந்து கடந்து, சிறுவர்கள் இறந்து போயிருப்பார்கள் என முடிவுக்கு வருகின்றனர். இதற்கிடையில், இங்கிலாந்தில் இருந்து பிரபல ஸ்குவா டைவிங் நிபுணர்கள் இருவர் வருகிறார்கள். 8 நாட்களுக்குப் பின், அவர்கள் குகைக்குள் அடைய வேண்டிய இலக்கை அடைந்து உள்ளே செல்லும் போது, ஆச்சரியமாக, 13 பேரும் உயிருடன் இருக்கின்றனர்.
சுமார் 7 மணி நேரம் பயணம் செய்தால் தான், சிறுவர்கள் இருக்கும் இலக்கை அடைய முடியும். கரடுமுரடான அந்த குகைப்பாதையில், போதிய ஆக்ஷின் இல்லாமல் அங்கு செல்வது தற்கொலைக்கு சமம். சிறுவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்கிற செய்தியோடு திரும்பும் அந்த ப்ரிட்டீஷ் நிபுணர்களின் செய்தி, ஒட்டுமொத்தமாக சோகத்தில் நிற்கும் அந்த கிராமத்தினருக்கு பேரதிர்ச்சியாகவும், பேரானந்தமாக இருக்கிறது.
அவர்களை கண்டுபிடித்ததை விட, மீட்பது சவாலானது என்றும், அவர்கள் உயிரோடு வரப்போவதில்லை என்றும் அந்த மீட்பு குழு தெரிவிக்கிறது. அதன் பின், புதிய யுக்தியை பயன்படுத்தி அவர்களை மீட்கும் போராட்டம் நடக்கிறது. அதில் அவர்கள் மீட்கப்பட்டார்களா? புதிய திட்டம் கை கொடுத்ததா? அவர்களை மீட்க கிராம குழுவினர் செய்ய ஒத்துழைப்புகளுக்கு பலன் கிடைத்ததா? என்பது தான் கதை.
View this post on Instagram
‛இன்ச் பை இன்ச்’ சுவாரஸ்யம் குறையாமல், அதே நேரத்தில் நீட்டி முழக்காமல், ‛டக் டக் டக்’ என காட்சிகள் நகர்கிறது. பிரமிப்பான மலை, அதில் விடாது பெய்யும் மழை என பரபரப்பான காட்சிகளிலும் பரவசம் தொற்றிக் கொள்கிறது. 13 பேரையும் உயிரோடு மீட்டு , அவர்கள் கிராமத்திற்கு திரும்பியதும், ஏதோ நம்ம வீட்டு பிள்ளை வீடு திரும்பியதைப் போல ஒரு உணர்வை வருவதை தவிர்க்கவே முடியாது.
ஆபத்தி சிக்கி மீட்கப்பட்டவர்கள், அல்லது இறந்து போனவர்கள் கதையை நாம் லட்சக்கணக்கில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த கதை அதிலிருந்து அனைத்திலும் மாறுபட்டது. காரணம், இது ஒரு உண்மை கதை. உண்மை கதையில் கற்பனைகளுக்கு வேலை இல்லை என்பதால், அவர்கள் தேவையற்ற கற்பனைகளை தவிர்த்து, நிஜத்தோடு பயணித்ததில் பாதி வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்த படம், உண்மையில் உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம். தொழில் நுட்ப கலைஞர்களை கூறினால், அவர்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் படைப்பை, அவர்களை அறிமுகப்படுத்தும்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், தாய்லாந்து மொழி பேசும் போது, தமிழ் சப்டைட்டிலோடும், ஆங்கிலம் போசும் போதும், தமிழ் மொழியோடும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.