மேலும் அறிய

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

Sembi Review in Tamil: கோவை சரளாவின் மாறுபட்ட நடிப்பை காணவும், பிரபு சாலமனின் இயற்கை பயணத்தில் இணையவும், நிச்சயமாக திரையரங்கிற்கு சென்று இந்த படத்தை பார்க்கலாம்.

Sembi Movie Review: பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளாவின் நடிப்பில் வெளிவந்துள்ள படம்  ‘செம்பி’. அழகான மலைகிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீராயின் பேத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள்;  இதனையடுத்து அவர்கள் இருவரும் சொந்த இடத்தை விட்டு, திண்டுகல்லுக்கு செல்லும் பேருந்தில் பயணம் செய்கின்றனர். அவர்களை சூழ்ந்த அந்த கொடுமை அவர்கள் செல்லும் வழியெல்லாம் துரத்திக்கொண்டே வருகிறது. இதனிடையே அந்த பேருந்தில் உள்ள சகபயணிகளுள் ஒருவரான வழக்கறிஞர் (அஸ்வின்) இவர்களுக்கு உதவுகிறார்; இறுதியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்ததா? இல்லையா என்பதற்கான பதிலே செம்பி படத்தின் கதை. 

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா  ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

பிரபு சாலமனின் டெம்ளேட் படம் 

மைனா, கும்கி, தொடரி, கயல் போன்ற படங்களை தனக்கான பாணியில் இயக்கி தன்னை ஒரு கவனம் ஈர்க்கும் இயக்குநராக நிலைநிறுத்தியவர் பிரபு சாலமன். செம்பி படத்திலும் , அதே பாணியை சிறந்த முறையில் கையாண்டு இருக்கிறார்;

இவரின் படத்தில் இயற்கையின் எழிலும், உள்ளூர் பேருந்தும், அங்கு நடக்கும் இயல்பான விஷயங்களும் இடம்பெற்று இருக்கும். பேருந்து முதல் ரயில் வரை என அனைத்து வாகனங்களின் பயணத்தின் வாயிலாகவே அவரது கதை கடந்து செல்லும். அந்தவகையில் இந்த படமும், அப்படியே அமைந்து இருக்கிறது. இதில் இடம்பெற்ற திரைக்கதையும், வசனங்களும் செம்பி ஒரு அக்மார்க் பிரபு சாலமனின் படம் என்பதை உணர்த்துகிறது; எப்போதும் சோகத்தில் முடியும் பிரபு சாலமனின் டெம்ளேட் தடம் மாறியிருக்கிறது. 

படத்தில் நடித்த நட்சத்திரங்கள்

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா  ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

செம்பியின் பாட்டியாக நடித்துள்ள கோவை சரளாவின் நடிப்பு படத்தின் அஸ்திவாரமாக அமைந்துள்ளது. முன்னதாக நகைச்சுவையில் கலக்கிய இவர், செம்பியில் சீரியஸான கதாபாத்திரமாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் மீது மக்கள் வைத்திருந்த எதிர்ப்பார்ப்பு வீண்போகவில்லை.

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா  ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

அநீதிக்கு குரல் கொடுக்க வந்த அஸ்வின் முதல் பாதியில் அமைதியாகவே இருந்து, விளம்பர பட மாடல் போல் அமர்ந்து கொண்டு வசனம் பேசினார். பின், இரண்டாம் பாதியில் இவருக்கு ஒரு குட்டி சண்டை காட்சி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை. வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஸ்வின் இன்னும் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்க வேண்டும். 

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா  ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

தம்பி ராமையா, வழக்கமாக அவரின் டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தார். செம்பியாக நடித்த நிலா, தன் முதல் படத்தில் துன்புறுத்தப்பட்ட பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார். படத்தின் வில்லன்களும் அவர்களை சார்ந்தோரும் இயல்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு, பேருந்தில் பயணித்த மக்களும் அழகாக நடித்துள்ளனர். ஆனால் ஒரு பேருந்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்பதுதான் சற்று செயற்கையாக தெரிந்தது.

இசை மற்றும் பின்னணி இசை 

இப்படத்தின் இசையமைப்பாளர் நிவாஸின் பின்னணி இசை, க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது. படத்தின் இடம்பெற்ற பாடல்கள் சற்று சுமாராகவே இருந்தது.

ஸ்டண்ட் காட்சிகள்

படத்தின் சண்டை இயக்குநரான ஃபீனிக்ஸ் பிரபு, மலைகிராமத்தை சார்ந்த பழங்குடி பெண் சண்டையிட்டால் எப்படியிருக்கும் என்பதை வடிவமைத்து இருந்த விதம் சிறப்பாக இருந்தது; க்ளைமாக்ஸ் காட்சியில் பதைபதைக்க வைத்த பஸ் விபத்து காட்சி தத்ரூபமாக இருந்தது.

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா  ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

கலை இயக்குநர்

கலை இயக்குநரான விஜய் தென்னரசின் வேலை பிரமிக்க வைக்கிறது. 

படத்தொகுப்பாளர்

2 மணி நேரம் செல்லும் இப்படம், சற்றும் போர் அடிக்கவில்லை. அதற்கு காரணமாக இருந்தவர், தேவையான காட்சிகளை வைத்தும் தேவையற்ற காட்சிகளை நீக்கியும் தன்னுடைய வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார் புவன். 

செம்பி படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

Sembi Review: நடிப்பில் மிரட்டிய கோவை சரளா.. அநீதிக்கு குரல் கொடுத்ததா  ‘செம்பி’? - விரிவான விமர்சனம் இங்கே!

பெண்களை அடிப்படையாகவும், கதை மாந்தராகவும் கொண்டு வெளிவரும் படங்களின் பட்டியலில், செம்பி படமும் சேர்ந்துள்ளது. கொடைக்கானலுக்கு செல்லாமலே தியேட்டரிலிருந்து அந்த ஊரின் எழிலை ரசிக்க வேண்டுமென்றால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். சமூக கருத்துக்களை பேசுகிறோம் என்ற பெயரில் பல படங்கள் அரைத்த மாவையே அரைத்து வருகிறது. ஆனால், செம்பி இந்த லிஸ்டில் சேராமல் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. கோவை சரளாவின் மாறுபட்ட நடிப்பை காணவும், பிரபு சாலமனின் இயற்கை பயணத்தில் இணையவும், நிச்சயமாக திரையரங்கிற்கு சென்று இந்த படத்தை பார்க்கலாம். மொத்தத்தில் செம்பி, குரலற்ற மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு படமாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால்  பரபரப்பு
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget