மேலும் அறிய

Kannai Nambathey Review : 'கண்ணை நம்பாதே' நம்பி தியேட்டருக்கு போகலாமா? படம் எப்படியிருக்கு? முழு விமர்சனம் இதோ!

Kannai Nambathey Review: உடன் பழகுபவர்களை எளிதில் நம்பக்கூடாது எனும் கருத்துடன் முடியும் கண்ணை நம்பாதே படம் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம், கண்ணை நம்பாதே. இது, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. உதயநிதியுடன் சேர்ந்து ஆத்மிகா, பூமிகா, சதீஷ், பிரசன்னா, ஶ்ரீகாந்த் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் எடுக்கப்படிருக்கும் இருக்கும் இப்படம் எப்படியுள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க. 

கதையின் கரு:

ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை.. இதற்கிடையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஹீரோ உதயநிதி.. சிக்கலில் இருந்து தப்பித்தாரா உதய்?‌ விவரிக்கிறது பரபரப்பான திரைக்கதை. 

"சோ"வென மழை பெய்யும் ஓர் இரவில் கார் ஓட்ட முடியாமல் தவிக்கும் கவிதாவிற்கு (பூமிகா) உதவி செய்கிறார், கதையின் நாயகன் அருண் (உதயநிதி). தன்னை வீட்டில் ட்ராப் செய்யும் அருணிடம், காரை எடுத்துச் சென்று நாளை காலை திருப்பி தருமாறு கூறுகிறார் கவிதா. மறுநாள் காரின் டிக்கியை திறந்து பார்த்தால் பூமிகா சடலமாக கிடக்கிறார். அந்த ஒரு இரவில் நடந்தது என்ன? கவிதாவின் கொலைக்கு காரணம் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது கண்ணை நம்பாதே படத்தின் மீதி கதை.

கண்ணிமைக்க வைக்காத முதல் பாதி:

காதலியின் வீட்டிலேயே வாடகைக்கு குடியிருக்கும் சாதாரண இளைஞராக வருகிறார் உதயநிதி. புது வீட்டிற்கு குடிபெயரும் இவர் தனது புது ரூம்-மெட் பிரசன்னாவை சந்தித்தவுடன் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. பூமிகாவை, தான் கொலை செய்யவில்லை என்றாலும் புது நண்பனின் பேச்சைக் கேட்டு அவர் சொல்படி பிணத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்வது நம்ப முடியாததாக உள்ளது. ஆரம்பத்தில் காதல்-பாடல் என மெதுவாக நகர்ந்த கதை இரவுநேர மழை காட்சிக்கு பின் சூடுபிடிக்கிறது.  

Kannai Nambathey Review : 'கண்ணை நம்பாதே' நம்பி தியேட்டருக்கு போகலாமா? படம் எப்படியிருக்கு? முழு விமர்சனம் இதோ!

திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை:

படத்தின் வேகத்திற்கு ஏற்ப இரவு நேர சென்னை காட்சிகளும், காண்போருக்கு பதைப்பதைப்பை ஏற்படுத்துகிறது. முதல் பாதி முழுவதும் முடிச்சுக்கு மேல் முடிச்சுகள் தான் அதை அடுத்த பாதையில் கரெக்டாக அவிழ்த்து ரசிகர்களை ஏமாற்றாமல் அனுப்புகிறார் இயக்குனர் மு. மாறன். திருப்பத்திற்கு மேல் திருப்பங்களாக அடுக்கியிருந்தாலும் அவற்றை ரசிகர்களை தொய்வடைய செய்யாத அளவிற்கு பின்னப்பட்டுள்ளது‌ கதையின் மிகப்பெரிய பிளஸ்.‌ 

கிளைமாக்ஸ் காட்சி, ஆடியன்ஸை இருக்கை நுனிக்கே வர வைத்து விடுகின்றது. முதலில் அம்மாஞ்சியாக தோன்றும் ஹீரோ இறுதியில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவது சற்று நம்புவதற்கு நெருடலாகதான் உள்ளது. இருப்பினும், ஹீரோவிற்கான வேலையை அலட்டல் இல்லாமல் செவ்வனே செய்து கொடுத்திருக்கிறார் உதயநிதி. ஒரு கொலையில் இருந்து நகரும் கதை, மெடிக்கல் மாஃபியா என பயணிப்பது ரசிகர்களை வியப்படைய வைக்கிறது. 

வில்லத்தனத்தில் மிரட்டிய நடிகர்கள்:

"ஜீ, ப்ரோ" என கூப்பிட்டு ஏதோ பக்கத்து வீட்டு பையன் போல அறிமுகமாகும் பிரசன்னா, சில காட்சிகளுக்குப் பிறகு வேறு ஆளாக விஸ்வரூபம் எடுப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னரே‌ பல படங்களில் தன்னால் நெகடிவ் கதாபாத்திரமாக செயல்பட முடியும் என்பதை அவர் நிரூபித்து விட்டார். ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக அமைந்ததே, பூமிகாவின் கதாப்பாத்திரம்தான். அதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Kannai Nambathey Review : 'கண்ணை நம்பாதே' நம்பி தியேட்டருக்கு போகலாமா? படம் எப்படியிருக்கு? முழு விமர்சனம் இதோ!

பூமிகா சொல்வதை செய்யும் ஆளாக ஸ்ரீகாந்தும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிரார். மொத்தத்தில் மூவருக்கும் கோலிவுட்டில் வில்லனாக நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 

ஆத்மிகாவை பெயருக்கு கதாநாயகியாக வைத்துள்ளனர். சதீஷ் காமெடிக்காக இருக்கிறாரா? கெஸ்ட் ரோலில் வருகிறாரா? என்பது விளங்கவில்லை. படத்தில் உள்ள அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் இறுதிவரை படத்தை தூக்கி சுமக்கின்றன. 

நம்பிப் போய் பார்க்கலாமா? 

எத்தனை முறை சுட முயற்சித்தாலும் அதிலிருந்து ஹீரோ மட்டும் தப்பிக்கும் தேவையில்லாத லாஜிக் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. மற்றபடி குறை கூறும் அளவிற்கு படத்தில் பெரிதாக லாஜிக் ஓட்டைகள் இல்லை.  உடன் பழகுபவர்களை எளிதில் நம்பக்கூடாது எனும் கருத்துடன் முடியும் கண்ணை நம்பாதே படத்தை, நல்ல த்ரில்லிங் அனுபவத்திற்காக தியேட்டரில் போய் பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Embed widget