Kaarmegam Review: ராதிகா ஆக்டிங்... தெலுங்கு டப்பிங்! விலங்கு சீரிஸ் போல த்ரில்லர் வகையா கார்மேகம்?
த்ரில்லர் ட்ராமாவாக உருவாக்கப்பட்டுள்ள கார்மேகம், அதன் வேலையை சரியாக செய்து முடித்துள்ளது.
Sharan Koppisetty
Raadhika Sarathkumar, Sai Kumar, Chandini Chowdary, Nandini Rai
தெலுங்கில் வெளியான காலிவானா என்ற வெப்சீரிஸின் தமிழ் டப்பிங்தான் கார்மேகம். இந்த வெப் சீரிஸில் ராதிகா சரத்குமார், நாகசவுரியா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 7 எபிசோட்களை கொண்டுள்ள இந்த வெப் சீரிஸ் திடுக் திருப்பங்கள், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புகளுடன் விறுவிறுவென செல்கிறது.
த்ரில்லர் ட்ராமாவாக உருவாக்கப்பட்டுள்ள கார்மேகம், அதன் வேலையை சரியாக செய்து முடித்துள்ளது. தொடக்கத்திலேயே நடக்கும் இரட்டை கொலைகள் அதனை சுற்றி தொடங்குகிறது கார்மேகம். தொடக்கத்திலேயே முடிச்சுகளை அடுத்தடுத்து போடும் இயக்குநர் ஒவ்வொரு எபிசோட் முடியும்போதும் அடுத்த எபிசோடுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறார்.
Yes, #Kaarmegam is trending #1 on #ZEE5. Have you watched this thrilling web series yet?
— ZEE5 Tamil (@ZEE5Tamil) April 22, 2022
Watch the web series https://t.co/W0ySKjgr89#KaarmegamOnZEE5 #ZEE5@realradikaa #SaiKumar @iChandiniC @99_chaitu @ImNandiniRai #ThagubothRamesh #SharanyaPradeep @nseplofficial pic.twitter.com/0Fmo9Cvs9e
பெரிய அளவில் லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் விறுவிறுவென அடுத்தடுத்த எபிசோட்களுக்கு கடத்திச் செல்கிறார் இயக்குநர் சரண் கோபிசெட்டி. அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வேலைகளை சரியாக செய்துள்ளனர். குறிப்பாக கார்மேகத்தை ராதிகாவும், சாய்குமாரும் தங்களது நடிப்பால் சுமந்து செல்கின்றனர்.
பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே முதல் பாதி முடிந்துவிட இரண்டாம்பாதி அதற்கான விடைகளை எல்லாம் கொடுக்கிறது. க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க சில விஷயங்களை பார்வையாளர்களால் கணிக்க முடிந்தாலும் கடைசியில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
மைனஸ் என்ன?
கதையில் பெரிய லாஜிக் ஓட்டை இல்லை என்றாலும் சில இடங்களில் கதைக்காகவும், ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்பதற்காகவும் காட்சிகள் இருப்பது லாஜிக் மீறலாக ஃபீல் ஆகிறது. தெலுங்கின் வெப்சீரிஸ் தமிழில் டப்பிங் என்பதால் ஒரு வித அசெளகரியத்தை உணர முடிகிறது. அதே நேரத்தில் கார்மேகத்தின் மர்மமும் அடுத்தடுத்த எதிர்பார்ப்பும் அதனை கடந்து நம்மை ரசிக்க வைக்கிறது.
பொதுவாக த்ரில்லர் ஜார்னரை கையில் எடுத்து வெப் சீரிஸ்கள் வெற்றி பெறுகின்றன. சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற விலங்கு சீரிஸும் த்ரில்லரை கையில் எடுத்தே வெற்றி பெற்றது. அந்த வரிசையில் கார்மேகமும் இணைந்துள்ளது.
இந்த கார்மேகம் சீரிஸ் Zee5ல் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்