மேலும் அறிய

Aattam Movie Review: 12 ஆண்களில் ஒரு குற்றவாளி.. அமேசானில் ரிலீசாகியுள்ள ஆட்டம் படம் விமர்சனம் இதோ!

Aattam Movie Review : அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் ஆட்டம் (Aattam ) படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

கடந்த ஆண்டு திரைப்பட விழாக்களில் வெளியாகி தற்போது ஓடிடி தளத்திற்கு வந்திருக்கும் மலையாளப் படம் ஆட்டம். ஆனந்த் ஏகர்ஷி இந்தப் படத்தை இயக்கியுள்ள இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. ஆட்டம் படத்தின் முழு விமர்சனம் இதோ

ஆட்டம் (Aattam)

13 நபர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழு. இந்த நாடகக் குழுவில் இருக்கும் 12 நபர்கள் ஆண்கள் ஒருவர் அஞ்சலி என்கிற பெண் (ஜரின் ஸிஹாப்) . அஞ்சலிக்கு பாலிய பருவத்தில் இருந்து நண்பனாகவும் தற்போது அவளது காதலனாக இருப்பவன் வினய். இந்த நாடகத்தில்  நடிப்பவர்கள் அனைவரும் பகுதி நேரமாக ப்ளம்பர் , செஃப் , டிராவல்ஸ் என ஏதோ ஒரு வேலை செய்து வருபவர்கள். இதில் கொஞ்சம் செல்வாக்கான ஒருவர் என்றால் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி.

சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த காரணத்தால் ரவி பரவலாக அறியப்படுபவனாக இருக்கிறான். தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் நாடகத்தை அரங்கேற்ற நிகழ்ச்சிகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் முக்கிய கதாபாத்திரம் அவனுக்கு கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக இதே நாடகக் குழுவில் இருக்கும் வினய்க்கு இது பிடிப்பதில்லை. இப்படியான நிலையில் இந்த குழுவின் நாடகத்தைப் பார்த்த வெள்ளைக்கார தம்பதிகள் தங்களது ரெஸார்ட்டில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அஞ்சலில் உட்பட 13 நபர்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்கிறார்கள். 

குடி, ஆட்டம் , பாட்டம் , வம்புச் சண்டைகள் என செல்லும் இந்த பார்ட்டி முடிந்த அடுத்த நாள் அதிகாலை அஞ்சலி யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விடுகிறாள். விசாரிக்கையில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது தன்னை தகாத முறையில் யாரோ தொட்டதாக அவள் வினயிடம் கூறுகிறாள். அந்த நபரின் முகத்தை தான் பார்க்கவில்லை என்றும் அவள் கூறுகிறாள். அஞ்சலியிடம் பாலியல் சீண்டல் செய்த அந்த ஒரு நபர் யார் என்பதை விசாரிக்கும்  நோக்கில் கதை நகர்கிறது.

விமர்சனம்

படத்தின் பெரும்பகுதி வசனங்களால் மட்டுமே நகரும் வகையான படம் ஆட்டம் . இதனால் சஸ்பென்ஸ் , த்ரில் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் சோர்வை அளிக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் நோக்கம் சுவாரஸ்யத்தைக் கடந்த ஒன்றை விவாதிப்பதே. ஒரு சமூகத்தில்  ஒரு பெண் தான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக கூறும் போது அதனை ஆண்கள் அந்த பெண்ணின் காதலன் உட்பட எப்படி எதிர்கொள்கிறார்கள், அவளிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை பலகோணங்களில் இருந்து அராய்கிறது இந்தப் படம்.

படத்தில் இறுதிவரை யார் குற்றவாளி என்பதை தெரிவிக்காமல் ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சந்தேகப் பட வைக்கிறார் இயக்குநர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த குற்றத்தை அந்த 12 ஆண்களில் யாரை சந்தேகப்பட்டாலும் அவர் அந்த குற்றத்தை செய்திருப்பார் என்று ஏதோ ஒரு வகையில் நம்ப முடிகிறது. குற்றம் செய்தவன் மட்டுமில்லை அவனுக்கு ஆதரவு தெரிவிப்பது அவனது சூழ்நிலைகளை நியாயப்படுத்துவது எல்லா தரப்பினரையும் கேள்வி கேட்கிறது இப்படம் .

மொத்த கதையையும் நியாயப்படுத்தும் வகையில் கிளைமேக்ஸ் அமைந்துள்ளது. எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்லாமல் பார்வையாளர்களின் புரிதலுக்கு சில விஷயங்களை சொல்லாமல்  விட்டிருக்கலாம் என்பதே படத்தின் மீதான விமர்சனமாக வைக்கப்படுகிறது. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget