(Source: ECI/ABP News/ABP Majha)
World Cat Day 2022: உலக பூனைகள் தினம்! பூனை வளர்ப்பை பற்றி தெரிஞ்சுக்கோங்க !
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பூனைகள் தினம் :
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பூனைகளின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூனை உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் இந்த தினம் ஊக்குவிக்கிறது.
நோக்கம் :
பூனைகள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுள் ஒன்று. வீட்டை பாதுக்காப்பது பூனையின் வேலை இல்லை என்றாலும் கூட பலரது குடும்பங்களில் வீட்டின் உறுப்பினர்களுள் ஒருவராக , செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படுகிறது. குறிப்பாக மேலை நாடுகளில் அதிகமாக பூனை வளர்க்கப்படுகிறது. பூனைகளுள் பல வகைகள் உண்டு. சில பூனைகள் அமைதியாக இருக்கும் சில ஆக்ரோஷமாக இருக்கும் . அதற்கு காரணம் அது வளர்ந்த விதமாக இருக்கலாம். நல்ல பூனைகளை எப்படி ஆதரித்து அவற்றின் மீது அன்பு செலுத்துகிறோமோ அதே போல மோசமான பூனைகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும், அதன் மீது பரிவு காட்டி பராமரிக்க வேண்டும் என்பதுதான் பூனை தினத்தின் முக்கிய நோக்கம்.
View this post on Instagram
அறிவுறுத்தல் :
பூனை தினத்தன்று பூனை பிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக பூனைகளை விலங்குகளை விற்பனை செய்யும் ஷெல்டரில் இருந்து வாங்கத்தான் விரும்புவார்கள் . அதற்கு பதிலாக அடைக்கலம் மற்றும் அன்பு தேவைப்படும் தெரு பூனைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள். சிலருக்கு வீட்டின் சூழல் பூனை வளர்ப்பை தடுக்கலாம் அப்படியானவர்கள் அவை பராமரிக்கப்படும் இடங்களுக்கு சென்று சிறிது நேரத்தை செலவிடலாம் . செல்லப்பிராணிகளுடன் பழகுவதற்கும், உங்கள் நேரத்தை மிகவும் செழுமையாக செலவிடுவதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வீட்டில் ஏற்கனவே பூனைகள் இருக்கிறதா ? இந்த நாள் பூனைகளுக்கு மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது எனவே அவைகளுக்கு பிடித்த உணவுகளை விருந்தாக கொடுத்து, இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
View this post on Instagram