உடல் எடையை குறைக்கும் திட்டமா? எப்போது சாப்பிட வேண்டும்? ஆயுர்வேத பரிந்துரைகள்!
Weight Loss: உடல் எடை குறைக்கும் பயணத்தில் உதவும் சில பரிந்துரைகளாக ஆயுர்வேத மருத்துவம் சொல்வதை காணலாம்.
பல்வேறு காரணங்களுக்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற விரும்புபவர்கள் பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். அவை சிறப்பான பலன்களை கொடுக்காமல்போவது பலருக்கும் ஏமாற்றமடைய செய்யும். அவர்களுக்கு ஆயுவேத மருத்துவம் சொல்லும் சில பரிந்துரைகளை காணலாம்.
டயட், உடற்பயிற்சி, கலோரி எவ்வளவு சாப்பிடுகிறோம் உள்ளிட்ட பலவற்றை கவனித்தும் திட்டமிட்டப்படி உடல் எடையை குறைக்க முடியவில்லையே? அதற்கு நீங்கள் மட்டும் பொறுப்பு இல்லை. திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு செயலும். அதைவிட முக்கியம் ஒருவரது உடல்நிலைக்கு அது சரியானதா என்பதுதான். டயட், உடற்பயிற்சி போன்ற திட்டமிடுதலில் ஏதாவது ஒன்று இல்லாமல் இருக்கலாம். இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுவது சரியான நேரத்திற்கு சாப்பிடுவது. எந்த நேரத்தில் உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவது ஏன் முக்கியம்?
கலோரி அளவுகளுடன் சாப்பிடுவது மட்டுமே போதுமானது என்று நினைப்பவரா? உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சூரியன் இருக்கும் நேரத்தில் மட்டுமே செரிமான மண்டலம் அதிக திறனுடன் செயல்படும். சூரியன் உதித்து மறையும் காலத்தில் உடல் கவனிக்கும். அதன்படியே உடலின் செயல்பாடுகள் நடைபெறும். பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் செரிமான மண்டலம் சீராக செயல்படும். உடலுக்குத் தேவையான சத்துகள் உறிஞ்சப்படும். அதனாலயே இரவு நேரங்களில் அதிகமாகவோ அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது என்று சொல்வதுண்டு. குறிப்பாக, இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
https://tamil.abplive.com/web-stories/lifestyle/foods-that-were-labeled-as-rich-in-protein-211241
உணவு சாப்பிட எது உகந்த நேரம்?
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற திட்டம் இருப்பவர்கள், காலையில் சூரியன் உதித்ததும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடுவது சிறந்தது. மதியம் 1 மணிக்குள் உணவு, இரவு 7 மணிக்குள் உணவு சாப்பிடுவது நல்லது. இரவு 8 மணிக்கு மேல் திட உணவுகள் எதுவும் சாப்பிட வேண்டும். தேவையெனில், ஹெர்பல் டீ குடிக்கலாம். இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.
இதெல்லாம் முக்கியம்:
தூக்கம்:
8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். ghrelin ஹார்மோன் பசி உணர்வை மூளைக்கு கடத்தும். leptin ஹார்மோன் பசி தீர்ந்துவிட்டது என்பதை உணர்த்தும் ஒன்று. தூக்கம் பாதிக்கப்பட்டால் இவை இரண்டின் சமநிலை பாதிக்கப்படும். அதனால் சீராக தூக்கம் மிகவும் அவசியம்.
தண்ணீர் குடிப்பதன் அவசியம்?
சில நேரங்களில் உங்களுக்கு பசி உணர்வு எடுப்பதுபோல தோன்றலாம். ஆனால், உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமலும் இருக்கலாம். தேவைப்படும்போது குறிப்பிட்ட இடைவேளையில் தண்ணீர் குடிக்கவும்.
உடல் எடையை குறைக்க டயட்டில் அவசியம் இடம்பெற வேண்டியவை?
தேன்:
தேன் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது என்கின்றது ஆயுர்வேத மருத்துவம். எலுமிச்சை சாறு தேன் சேர்த்து குடிப்பது, க்ரீன் டீ தேன் சேர்த்து குடிப்பது ஆகியவற்றை செய்வதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்கலாம். இது கபம் என்று சொல்லப்படுவதை சீராக இருக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவும்.
பார்லி:
பார்லி ஆயுர்வேத மருத்துவத்தின் படி உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பார்லி ஓர் சிறந்த உணவாக கருதப்படுகிறது. பார்லி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். குறிப்பாக இது உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் என்று ஆற்றல் கொண்டது. இது உடலிலுள்ள நச்சுக்கள், கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைக்கும்.
மஞ்சள்:
மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிகமாக உள்ள கபத்தை குறைக்க மஞ்சள் உதவும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது.
நெல்லிக்காய்:
ஆயுர்வேத மருத்துவத்தின் படி, வாதம் கபம், பித்தம் ஆகிய மூன்றையும் சீராக வைக்க உதவும் திறன் நெல்லிக்காய்க்கு உண்டு. உடல் எடையை நிர்வகிப்பதற்கும் இது உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க, அதிக முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள், நெஞ்சு எரிச்சல் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றிற்கும் நெல்லிக்காய் மருந்தாக இருக்கும்.
இஞ்சி:
இஞ்சி செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படும். ஒரு சிறிய துண்டு அளவில் இஞ்சி சாப்பிடுவது கபத்தை சீராக இருக்க உதவும். அதோடு மட்டும் இல்லாமல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.