Watch Video: ”நம்பவே முடியல...” இணையத்தை கலக்கி வரும் சென்னை ஓவியரின் ஃபில்டர் காபி பதிவு..
தமிழ் எழுத்தாளர் கொற்றவையின் மகளும், ஓவியருமான வருணா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘காபி’ புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
காபி பிரியர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, வேலை பளுவுக்கு மத்தியில் நினைத்த நேரத்தில் காபி குடிப்பவர்கள். இன்னொரு வகையைச் சேர்ந்தவர்கள், காபி பற்றிய புகைப்படங்களை, செய்தியை, வீடியோக்களை பார்த்தாலே காபி குடிக்க வேண்டுமென எண்ணம் கொள்பவர்கள்.
அந்த வரிசையில், கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரை கலக்கி வருகிறது இந்த காபி பதிவு! தமிழ் எழுத்தாளர் கொற்றவையின் மகளும், ஓவியருமான வருணா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘காபி’ புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருகிறார். பார்த்தவுடன் காபி புகைப்படம்தான் என நம்பும் அளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது. ஆனால், அது ஓவியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வீடியோவைக் காண:
View this post on Instagram
40 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ், 4 ஆயிரத்துக்கும் அதிகமான ரீட்வீட்ஸ், 1000 கமெண்ட்டுகள் என நெட்டிசன்கள் அந்த பதிவை கொண்டாடி வருகின்றனர். புகைப்படத்தை உற்று கவனித்தால்தான் அது ஓவியம் என்பது தெரிகிறது என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
OUTSTANDING.. i had to zoom in to make sure that it isn't a painting... INCREDIBLE...
— Sumeet Raghvan सुमीत राघवन (@sumrag) April 21, 2022
இந்த பதிவை அடுத்து, தான் வரைந்த ஓவியத்தின் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் கொற்றவையின் மகள் வருணா. அதுவும் நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்