Watch Video: விமானத்தில் பாராட்டு மழையில் நனைந்த பொம்மன் - பெல்லி..! இன்ப அதிர்ச்சி தந்த விமானி, பயணிகள்..!
The Elephant Whisperer Watch Video: ஆஸ்கர் விருது வென்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் மாந்தர்களான பொம்மன், பெல்லிக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
'The Elephant Whisperers' சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் படக்குழுவினருக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி, அப்படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொண்டனர். இதில், கதாநாயகர்களான பொம்மனும், பெல்லியும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இருவரும் மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கோவைக்கு திரும்பினர்.
பொம்மனும், பெள்ளியும் இண்டிகோ விமானத்தில் பயணிப்பது விமானிக்கு தெரியவர உடனே அவர் காக்பிட்டிலிருந்து வெளியே வந்து அவர்களை வரவேற்றார். அதோடு, "ஆஸ்கர் விருது வென்ற ஆவண குறும்படத்தின் கலைஞர்கள் பொம்மனும், பெள்ளியும் நம்முடன் பயணிக்கிறார்கள். மிகவும் பெருமையான தருணம். இவர்கள் ஹீரோக்கள் அல்ல; நிஜ மனிதர்கள்.அவர்களைப் பாரட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். பயணிகள் கைதட்டி உறக்கமாக வரவேற்று, பொம்மனும் பெள்ளியும் தங்களுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
Nice gesture @IndiGo6E ❤️#TheElephantsWhisperers #TNForest #BommanBellie pic.twitter.com/szjojWmlFI
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023
இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ். தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாஹு இண்டிகோ விமானத்தில் பயணிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'The Elephant Whisperers' நிஜ நாயகர்களுக்கு விமான பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்ததாக குறிபிட்டுள்ளார்.
‘தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ்’
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சென்ற 13-ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யானைகளைப் பராமரிக்கும் முதுமலையைச் சேர்ந்த தம்பதியைப் பற்றிய ஆவண்ப்படமான ‘தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ்’ சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதினைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தது. நாடே அவர்கள் விருது பெற்றதில் மகிழ்ந்தது.
முதுமலைப் பகுதியில் யானைகளைப் பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி இவர்களுக்கும் குட்டி யானை ரகுவுக்கும் இடையேயான அழகிய உறவை இயற்கை எழில்கொஞ்ச படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது முதலே கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வந்த நிலையில், ஆஸ்கருக்கும் பரிந்துரையானது.
தொடர்ந்து கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதினை தி எல்ஃபேண்ட் விஸ்பரர்ஸ் படம் தட்டிச்சென்றது. இந்தப் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் பெற்ற நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
‘த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றியிருந்த தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை முன்னதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தது வைரலானது.
அதேசமயம் ரகு, பொம்மி ஆகிய யானைகள் வளர்ந்து விட்ட நிலையில், அவற்றை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து பொம்மன், பெல்லி இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆஸ்கர் விருது இப்படம் வென்றதை அடுத்து, மீண்டும் அவர்களிடமே அந்த யானைகளை பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்தனர்.