Diwali munchies: தீபவாளி பலகாரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?
Diwali munchies: நெய் பயன்படுத்தி இனிப்பு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.
தீபாவளி வரப்போகுது. நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளியும்’ (Diwali) ஒன்று. தீபாவளி நாளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு, உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். தீபாவளி என்ற நன்மையான நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்யப்படுவதும் உண்டு. இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு பண்டிகைகள் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
இப்படியான தீபவாளி பண்டிகை காலத்தில் சாப்பிடும் உணவு வகைகளில் எண்ணெய் அதிகம் இருக்கும் என்ற யோசனையாக இருக்கிறதா? எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிக கலோரிகளுடன் இருப்பதுடன் அவை நல்ல கொழுப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. முறுக்கு, அதிரசம், சமோசா உள்ளிட்டவை பொரிப்பதற்கு எண்ணெய் பயன்படுத்தாமல் நெய் பயன்படுத்தலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நெய்:
நெய் பயன்படுத்தி உணவுப் பொருட்களை பொரிப்பதன் மூலம் அதிலிருந்து வெளியேறும் நச்சு சார்ந்தவை குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நெய் நல்ல கொழுப்பு உள்ள உணவுப் பொருள். வைட்டமின் ஏ, டி, இ, கே உள்ளிடவை உள்ளது. இதிலுள்ள ஃபேட்டி ஆசிட்ஸ் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுக்கா உதவும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தி பொரிக்கப்படும் எண்ணெய் வகைகளை சாப்பிடுவதால் ஏராளமான தீங்கு ஏற்படும்.
எவ்வளவு நெய் சாப்பிடலாம்?
குடல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய நெய் மிகவும் சிறந்தது. அதனாலேயே ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் அளவோடு நெய் சாப்பிடலாம். இதில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. ஒரு நாளைக்கு 3-4 டீஸ்பூன் நெய் ஒருவர் உணவில் எடுத்துகொள்ளலாம்.
நெய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது என்றாலும் அதில் தயாரிக்கப்படும் இனிப்பு, உணவுகளுக்கு தனி சுவை உண்டு. நெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. நெய்யில் உள்ள butyric acid உடலின் செரிமான மண்டலத்துக்கு நல்லது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.