மேலும் அறிய

Health Tips: பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வல்வோ டெர்மடோசிஸ் பிரச்னை.. தடுப்பது எப்படி?

பெண்களின் பிறப்புறுப்பில் நீடித்த சரும பிரச்னைகளாக அறியப்படுவது தான் வல்வோ டெர்மடோசிஸ். இதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பார்க்கலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் நாம் சுகாதாரம் பேணுவதில் ஆண், பெண் பேதம் இல்லாமல் கவனம் செலுத்துகிறோம். ஆனால் பல விஷயங்களைப் பற்றி நாம் பேச மறுக்கிறோம். அதில் ஒன்று தான் வல்வோ டெர்மடோசிஸ். பெண்களின் ஆரோக்கியம் பற்றி பேசும் இந்த நேரத்தில் இது பெண்களின் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் ஏற்படும் ஒருவித சரும பிரச்னையாகும். 

பிறப்புறுப்பில் நீடித்த சரும பிரச்னைகளாக அறியப்படும் வலி, எரிச்சல், அரிப்பு, தோல் தடிப்பு, தோல் நிற மாற்றம் போன்ற அறிகுறிகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை சில நேரங்களில் லேசான பாதிப்பாக அமையலாம். ஒரு சிலருக்கு தினசரி வாழ்க்கையில் பிரச்னையை உண்டாக்கக்கூடிய அளவுக்கு பிரச்னையாக உண்டாகலாம். அதிகப்பட்சமாக வல்வோ டெர்மடோசிஸ் ஒரு கேன்சரின் அறிகுறியாக கூட இருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தோல் அழற்சி தொடங்கி பாக்டீரியா தொற்றுகள், பூஞ்சைகள், சோப்பு, ஷாம்பூ, சானிட்டரி நாப்கின்களால் உண்டாகும் எரிச்சல், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை இந்த வல்வோ டெர்மடோசிஸ் பிரச்னைக்கு காரணமாக அமையலாம் என சொல்லப்படுகிறது.  

சிகிச்சை தாமதமானால் என்ன நடக்கும்?

பலரும் நமக்கு உடலில் அரிப்பு ஏற்படும் சமயத்தில் குறிப்பிட்ட இடத்தில் காற்றுப்படாமல் இருப்பதாலும், வியர்வை உள்ளிட்ட பிரச்னைகளாலும் அப்படி ஏற்படுவதாக நாம் நினைப்போம். ஆனால் அது மட்டுமே காரணமாக இருப்பாது. மேலே குறிப்பிட்ட நீடித்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சிகிச்சை தாமதமாகும் பட்சத்தில் பிறப்புறுப்பில் நீடித்த வலி, பாலியல் உறவில் சிக்கல், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் தோன்றலாம். 

எனவே இந்த வல்வோ டெர்மடோசிஸ் பிரச்னையை அலட்சியமாக எண்ணாமல் முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆரம்பத்தில் இதற்கு சிகிச்சையெடுத்தால் முழுவதுமாக குணப்படுத்த முடியும். மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நாமாக சுயமாக எடுக்கக்கூடாது. பெண்களில் உடல் நலனில் வல்வோ டெர்மடோசிஸ் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் வெளிப்பாடு என சொல்லலாம். 

வல்வோ டெர்மடோசிஸ் தடுப்பது எப்படி?

  • பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் சோப்பு போன்ற இரசாயனம் அடங்கிய பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்கலாம். சுத்தமான நீரில் கழுவினால் போதுமானது. 
  • இந்த தனிப்பட பகுதி மென்மையான பகுதி என்பதால் அதில் இருக்கும் முடிகளை அகற்ற ஹேர் ரிமூவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  • உடலில் ஏற்படும் அரிப்புக்கு நீங்கள் ஏதேனும் மாத்திரை, க்ரீம்களை பயன்படுத்தலாம். ஆனால் அதனை வல்வோ டெர்மடோசிஸ் பிரச்னைக்கு பயன்படுத்தக்கூடாது.
  • எந்த வயதிலும் இந்த பிரச்னை வரலாம் என்பதால் மன அழுத்தத்தில் அதிகமாக இருந்தாலும் கவனம் தேவை. சரும பராமரிப்பை எப்போதும் பேணுங்கள். 

(இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மருத்துவர்களின் கருத்துகளாகும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகவும். இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)

தலைப்பு செய்திகள்

TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Embed widget