Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் ரூபாய் 700 கோடி வசூலைக் குவித்து அசத்தியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியாகிய திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
700 கோடி வசூல்:
பெரும்பான்மையான ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், படத்திற்கு முதல் நாள் முழுவதுமே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. தினசரி அரங்குகள் நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருந்த ஜெயிலர் 2, படம் வெளியாகி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் டிக்கெட்டுகள் கிடைக்காத அளவிற்கு திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
படம் வெளியாகி கடந்த 11 நாட்களில் இந்தியாவில் மட்டும் ஜெயிலர் 2 படம் ரூபாய் 400 கோடி வசூலை எட்டியுள்ளது. உலகெங்கும் ரூபாய் 700 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 11 நாட்களில் ஜெயிலர் 2 படம் ரூபாய் 398.70 கோடி வசூலைக் குவித்துள்ளது. உலகெங்கும் இந்த படம் ரூபாய் 710.35 காேடி வசூலைக் குவித்துள்ளது.
வசூல் மழை:
ரஜினிகாந்தின் மாஸ் சற்றும் குறையவில்லை என்பதை பறைசாற்றும் வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 படம் நேற்று மட்டும் 11 ஆயிரத்து 954 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திர பட்டாளங்கள்:
நெல்சன் இயக்கிய இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். வித்யாபாலன், ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நடிகைகள் கூடாரமும் இந்த படத்தில் உள்ளனர். எஸ்ஜே சூர்யா, சுராஜ் வில்லன் வேடத்தில் நடிப்பில் அசத்தியுள்ளனர்.
இசையும், நகைச்சுவையும்:
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது அனிருத்தின் இசையாகும். இந்த படத்தைப் பொறுத்தமட்டில் மற்றொரு பலமாக அமைந்தது நகைச்சுவை ஆகும். படத்தில் நமோ நாராயணா - ரஜினிகாந்த் நகைச்சுவை காம்போ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வசூல் நிலவரத்தை இதுவரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் அவர்கள் படத்தின் வசூலை வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது.
1000 கோடி வசூல் எட்டாதது ஏன்?
ஜெயிலர் 2 படம் ரூபாய் 1000 கோடி வசூலை எட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், வட இந்தியாவில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் பிரச்சினை காரணமாக அங்கு படம் பெரியளவு வெளியாகவில்லை. இதனால், படத்தின் வசூல் வட இந்தியாவில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் பாதிக்கப்பட்டது. தீபாவளி வரை பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், ஜெயிலர் 2 படம் தொடர்ந்து வசூல் மழையை குவிக்கும் என்று கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















