மேலும் அறிய

முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!

நரை முடியை மறைப்பதற்காக ஒவ்வொரு வாரமும் அல்லது அடிக்கடி மருதாணி பூச வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள்.

பலர் நரை முடியை மறைக்கவும், கூந்தல் பராமரிப்பிற்காகவும் தங்கள் தலையில் மருதாணியைப் பயன்படுத்துகின்றனர்.  ஆனால் இதனைப் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது எதனால் என பார்க்கலாம். 

சமீபகாலமாக நரை முடியால் பாதிக்கப்பட்டவர்களும், முடிக்கு ஹேர் கலர் அடிக்க நினைப்பவர்களும் முதலில் மருதாணியை தான் பயன்படுத்துவார்கள். இது இயற்கையானது, பாதுகாப்பானது என்றெல்லாம் எண்ணம் நமக்குள் இருக்கும். இதை ஒரு இயற்கையான முடிச்சாயம் என்று கருதி சிறு வயது முதல் வயதானவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் அடிக்கடி தலைக்கு மருதாணி பூசுவது வறட்சி மற்றும் சொரசொரப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மருதாணியில் உள்ள ஒரு இயற்கைச் சாயமான லாவ்சோன், முடியில் உள்ள கெரட்டினுடன் பிணைந்து, ஆரஞ்சு-சிவப்பு முதல் பழுப்பு வரையிலான வண்ணங்களை அதற்கு அளிக்க முடியும். இந்தப் பிரச்சனை இயற்கையான மருதாணியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. சந்தையில் கிடைக்கும் சில மருதாணி முடிச்சாயப் பொருட்களில் மற்ற இரசாயனங்களும் சாயங்களும் கலந்திருக்கலாம். எனவே மருதாணி என்ற பெயரில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் இயற்கையானது இல்லை என்பதை உணருங்கள். 

மருதாணி  முடியை அடர்த்தியாகவும் வலிமையாகவும் உணரச் செய்யும். வறண்ட, சுருள் அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்கள் மருதாணி பயன்படுத்துவதை குறைத்து விடலாம். அதேபோல சாதாரண முடிச்சாயங்களில் உள்ள சில கடுமையான இரசாயனங்களைப் போல தூய மருதாணி முடியின் நிறத்தை வெளுக்காது. முடியின் மீது   மருதாணி இட்ட பிறகு ஈரப்பதமூட்டும் கண்டிஷனர் அல்லது பொருத்தமான முடி பராமரிப்பு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது. 

நரை முடியை மறைப்பதற்காக ஒவ்வொரு வாரமும் அல்லது அடிக்கடி மருதாணி பூச வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள். மருதாணி ஒருவரின் தலைமுடிக்குப் பலனளிப்பது மற்றொருவருக்கும் கட்டாயம் பலனளிக்கும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை. எனவே பயன்படுத்தும் முன் கவனம் தேவை. 

அதேசமயம் பிளாக் ஹென்னா என அழைக்கப்படும் கருப்பு மருதாணி  தயாரிப்புகளில் பாரா-ஃபீனைலெனெடியமைன் என்ற இரசாயனங்கள் இருக்கலாம். இது சிலருக்குக் கடுமையான தோல் ஒவ்வாமை, எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே பயன்படுத்தும் முன் அதில் உள்ள இடுபொருட்களை சோதனை செய்வது நல்லது. அரிப்பு, எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் அதை உங்கள் தலைமுடியில் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். கடுமையான பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருதாணி நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான சான்றுகள் எதுவும் இல்லை.மருதாணியை தலைமுடியில் பூசக்கூடாது என்பதை விட தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது நல்லது. 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget