Dementia: டிமென்சியா குறித்து புதிய ஆய்வில் தகவல்; என்னன்னு தெரியுமா?
Dementia: செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்கள் காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவது டிமென்சியா ஏற்படுவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்கள் காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவது டிமென்சியா ஏற்படுவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரபல தி லான்செட் பப்ளிக் ஹெல்த் (The Lancet Public Health ) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு இல்லாதோர் ஆகியோர்களைவிட செவித்திறன் குறைபாடோடு காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவோர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைபாடு இல்லாதவர்களுக்கு பல்வேறு காரணங்களினால் டிமென்ஷியா ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிமென்ஷியா - காது கேட்பதில் குறைபாடு இரண்டிற்குமான தொடர்பு
வயதானவர்கள் பெரும்பாலும் டிமென்ஷியா மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள். 2020 இல் வெளியிடப்பட்ட டிமென்ஷியா தடுப்பு, தலையீடு மற்றும் கவனிப்பு பற்றிய லான்செட் கமிஷனின் அறிக்கையின் படி, உலகளவில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட சுமார் 8 சதவிகிதம் பேர் காது கேளாமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
டிமென்ஷியா பாதிப்பை குறைப்பதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று செவித்திறன் இழப்பை நிவர்த்தி செய்வதே என்பதையும் இந்த ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி லான்செட் வெளியிட்ட அறிக்கையில், ஷாண்டோங் பல்கலைக்கழகத்தைச் (Shandong University) சேர்ந்த பேராசிரியர் டாங்ஷான் ஜூவும்,(Dongshan Zhu ) தனது கட்டுரையில் செவித்திறன் இழப்பு என்பது டிமென்ஷியா ஏற்படுவதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், செவித்திறன் கருவிகளைப் பயன்படுத்துவதால் டிமென்ஷியா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், நிஜ உலகில் டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதில் காது கேட்கும் கருவியின் செயல்திறன் தெளிவாகவும் சொல்ல இயலவில்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆய்வின் மு க்கியத்துவம்
புதிய ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது.ஏனெனில் டிமென்ஷியா ஏற்படுவது மீதான காது கேளாமையின் சாத்தியமான தாக்கத்தைத் குறைக்க காது கேட்கும் கருவிகள் சற்று உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மருத்துவர்களும் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்தஆய்வின் ஒரு பகுதியாக, UK Biobank தரவுத்தளத்தில் இருந்து 4,37,704 பேரின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.அவர்களிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள் காது கேளாமை மற்றும் செவிப்புலன் கருவிகளின் பயன்பாடு பற்றிய தகவல்களைச் சேகரித்தனர்.இதில் 56 வயதுக்குட்பட்டோர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கினருக்கு செவித்திறன் குறைபாடு ஏதும் இல்லை; 1,11,822 பேருக்கு குறைந்தளவிலான காது குறைபாடுகள் இருந்ததாக பதிவாகியுள்ளது.
செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு 42 சதவீதம் டிமென்சியா ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
செவித்திறன் கோளாறு உள்ளவர்கள் காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு 1.7 சதவீத டிமென்சியா ஏற்பட அபாயம் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், பிரிட்டனில் நான்கிலிருந்து ஐந்து பேர் செவித்திறனில் பிரச்சனை உள்ளவராக இருப்பினும், அவர்கள் காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
'நடுவானில் உடைந்த விண்ட் ஷீல்டு..' - 137 பயணிகள் உயிரை சாதுர்யமாக காப்பாற்றிய விமானி..!