முகம் பளபளப்பாக வேண்டுமா..? அரிசி கழுவிய நீர் இருந்தாலே போதும்..!
சூரிய ஒளியால் சிலரின் சருமத்தில் வறட்சி ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட சருமம் பொலிவுற வேண்டும் என நினைப்பவர்கள் அரிசி நீரை முகம் மற்றும் கைகளில் தடவி கழுவலாம்.
நாம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் நமது உணவில் மருத்துவ பலன்கள் இருப்பது ஏராளம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் நமக்கே தெரியான பல மருத்துவ நன்மைகள் உள்ளன. ஆனால், அதை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். சில பொருட்களின் நன்மையை தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் உடலுக்கு பொலிவை தரக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.
அரிசியை கழுவும் நீர்:
இந்தியாவில் பெரும்பாலான மக்களின் உணவு அரிசியாக உள்ளது. இங்கு அதிகளவில் அரிசி விளைவிக்கப்படுவதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதன்மை வகிறது. பாரம்பரிய ரக அரசிகளின் சத்துகள் ஏராளம் இருப்பதை கூற தனி மருத்துவ குறிப்புகளே உள்ளன. கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக அரிசியை மருத்துவ ரீதியாகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அரிசி சாப்பாடு, அரிசி உணவுகளை சாப்பிட்டு கேள்வி பட்டு இருப்போம். அரிசியில் மட்டுமே நன்மைகள் இருப்பது என்பதில்லை. அரிசியை கழுவிய நீரும் உடலுக்கு பலனளிக்க கூடியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அரிசியை கழுவி கீழே ஊற்றும் நீரில் கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
கைகளுக்கும் பலம்:
அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் நன்றாக பிசைந்து கழுவி எடுக்கும் நீரை முகத்திற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவி வந்தால், முகம் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது தடுக்கப்படும். அரிசியை நன்றாக பிசைந்து கழுவும் போது, கைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் அரிசி நீருடன் வினை புரிந்து நொதித்தலை செய்கிறது. இதனால், கைகளுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சூரிய ஒளியால் சிலரின் சருமத்தில் வறட்சி ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட சருமம் பொலிவுற வேண்டும் என நினைப்பவர்கள் அரிசி நீரை முகம் மற்றும் கைகளில் தடவி கழுவலாம். அப்படி செய்யும் போது அரிசியில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு, முகப்பருக்கள் நீக்கப்படுவதுடன், தோல் அழற்சி நோயும் குணமாகும் என 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட சரும பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அரிசியில் உள்ள தாதுக்கள் சருமத்தின் துளைகளில் இறுகி பலபலப்பை கொடுக்க கூடியது என்றும் கூறப்படுகிறது.
முடிக்கும் நன்மை:
இதுமட்டும் இல்லாமல் அரிசி நீரை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். அரிசி நீரில் தலைமுடியை அலசினால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, தலைமுடி மென்மையாகும். தலைக்குளிக்கும் போது ஷேம்பு போட்டு தேய்தபிறகு அரிசி நீரில் தலைமுடியை மசாஜ் செய்து அலச வேண்டும். இதனால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, நீளமாக வளரும் என கூறப்படுகிறது.
பிறந்த குழந்தைகளின் கால்கள் வலுப்பெற அரிசி கழுவிய நீரை கொதிக்க வைத்து அதன் கால்களில் ஊற்றி பிடித்து விடலாம். கிராமப்புறங்களில் இன்றும் அரிசி கழுவிய நீரில் குழந்தைகளை குளிப்பாட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த காலத்தில் உணவை மருந்தாக முன்னோர்கள் பயன்படுத்தியதால் இதை செய்து வந்தனர்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.