இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 7% நபர்களுக்கு மனச் சிதைவு ! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றின்படி, இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களில் 7 சதவீதம் பேர் ஸ்கிசோஃபெர்னியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் தகவல் வெளிவந்துள்ளது.
1859ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆக்ரா மனநல காப்பகம், இந்தியாவின் மிகப் பழமையான மனநல மையம் ஆகும்.
7 % பேருக்கு ஸ்கிசோஃபெர்னியா
வட இந்தியாவில் மனநலப் பிரச்னைகள் குறித்த சிகிச்சை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான சிறந்த மையமாக விளங்கும் இம்மருத்துவமனை தன் சமீபத்திய ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் சுமார் 7 சதவிகிதம் பேர் வெவ்வேறு அளவு தீவிரத்தன்மை கொண்ட Schizophreniaவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அறிகுறிகள்
இந்நிலையில், தன் சொந்த குடும்பத்திடமே பாதுகாப்பை உணராமல் நடத்தல், எந்த பின்புலமும் இல்லாமல் பெரிய திட்டங்கள் வகுத்தல் உள்ளிட்ட அசாதாரணமான செயல்களை ஸ்கிசோஃபெர்னியா அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Today is #WorldSchizophreniaDay — Watch this video and share it with your community. We eradicate stigma by educating ourselves and the people around us. To learn more about this mental health condition, visit https://t.co/vmKJWkq403https://t.co/2X18Cy6itd
— NAMI (@NAMICommunicate) May 24, 2022
தினமும் இம்மருத்துவமனைக்கு வரும் 25 - 30 வயதுக்கு உள்பட்ட 7 விழுக்காடு இளைஞர்கள் வெவ்வேறு விழுக்காடு தீவிரத்தன்மையுடன் கூடிய ஸ்கிசோஃபெர்னியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்றும் இம்மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காப்பகங்கள் ஸ்கிசோஃபெர்னியா நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டவை
”மன நல மருத்துவமனைகள் முதன்முதலாக ஸ்கிசோஃபெர்னியா நோயாளிகளுக்காகதான் திறக்கப்பட்டவை. நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கத் தொடங்கிய பின்னரே அவர்களுக்கு உள்ள கோளாறுகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
ஸ்கிசோஃபெர்னியா நோய் மரபணு மூலமாகவும் தோன்றலாம் அல்லது எந்த மூலக் காரணமும் இன்றியும் தோன்றலாம். ஆனால் இதன் அறிகுறிகளை விரைவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் மூலம் நாம் இந்நோய் தீவிரமடைவதைத் தடுக்கலாம்” என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்