கொரோனாவிற்கு பின் கொத்துக்கொத்தாக முடி கொட்டுதா? இனி.. இதை ஃபாலோ பண்ணுங்க.!
இந்த முடி உதிர்வை சரி செய்ய பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் 5 எளிமையான டிப்ஸ் விடியோவாக பகிர்ந்து உள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. அனைவரையும் பாதிக்கிறது.இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இந்த முடி உதிர்வை சரி செய்ய பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் 5 எளிமையான டிப்ஸ் வீடியோவாக பகிர்ந்து உள்ளார்.
View this post on Instagram
இதில் என்ன உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எனவும், வீட்டு வைத்திய முறைகளையும் பகிர்ந்து உள்ளார்.
- வெண்ணெய் - வெண்ணையை காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் தேவையான புரத சத்து நிறைந்து இருக்கிறது. உணவில் சேர்த்து கொள்ளும் போது , முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
2. ஆலிவ் லட்டு - இது மஹாராஷ்டிராவில் செய்யப்படும் பிரபலமான இனிப்பாகும். இதில் வெல்லம், தேங்காய், உளர் பழங்கள், நெய் ஆகியவை சேர்த்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பாகும். இதில் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
3. வீட்டில் சமைத்த சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு, காய்கள், பழங்கள் சேர்த்த சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
4. காலை உணவு தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவில் தான் ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.காலை உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பது பெரும்பாலான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
5. தூக்கம் - ஆழ்ந்த தூக்கம் மற்றும் ஓய்வு அவசியம். இது உடலின் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். தூக்கமின்மை கூட முடி உதிர்வதற்கு காரணமாக அமையும். 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
தலை முடி உதிர்தல் பெரிய பிரச்சனையாக இருந்து வரும் சூழ்நிலையில், கொரோனா தொற்றிற்கு பிறகு உடலை மிகுந்த கவனத்துடன் பார்த்து கொள்வது அவசியம். போதுமான அளவு புரத சத்து உள்ள உணவுகளே முடி வளர்ச்சிக்கு உதவும்.