Pongal 2024 Pooja: தைப் பொங்கல்: பூஜை செய்வது எப்படி? தேவையான பொருட்கள் என்னென்ன? - விவரம்
Pongal 2024 Pooja: பொங்கல் பண்டிகை காலத்தில் வாங்க வேண்டிய பூஜை பொருட்கள், பூஜை முறை குறித்த தகவல்களை காணலாம்.
ஜனவரி 15-ம் நாள் தைத்திருநாளாம் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனை வணங்கி, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மற்ற அனைத்தையும் வணங்கி கொண்டாடப்படும் திருநாள்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என எல்லா நாட்களிலும் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் என்ற இருக்கிறது. சூரியனை வழிபட்டு பொங்கல் படைக்க, பானை வைக்க சிறந்த நேரம் கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 6 மணிக்கு முன்னரே பானை வைக்கலாம். அல்லது கொஞ்சம் தாமதமாகத் தொடங்க நினைப்பவர்கள் 7.30 மணி முதல் 8:30-க்குள் பானை வைக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதுவே பொங்கல் வைத்து சூரியனை பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும்.
என்னென்ன பூஜை பொருட்கள் வாங்க வேண்டும்?
பொங்கள் பண்டிகைக்கு முந்தைய நாளே வீட்டை அலங்கரித்து மாவிலை, பூ மாலைகள் கொண்டு அலங்கரிக்கலாம். பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை வாங்கவும். பூஜைக்கு தேவையான விளக்கு, தட்டு உள்ளிட்டவற்றை தேய்த்து சுத்தப்பட்டுத்தி வைக்கவும். அதற்கு குத்து விளக்கு, பூஜை பொருட்கள் வைக்கும் தட்டு உள்ளிற்றவற்றிற்கு சந்தனம், குங்குமம் வைத்து தயார்படுத்தவும். மண் பானை பயன்படுத்தினால் புதிதாக மண் பானை வாங்கி அதை பயன்படுத்துபடி தயார் நிலையில் வைக்கலாம். பித்தளை, எவர்சில்வர் பானை என்றால் அதை நன்றாக சுத்தப்படுத்தி குங்குமம், மஞ்சள் கொத்து கட்டி தயாராக வைக்கவும். மஞ்சள் கொத்து, கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்களை முந்தைய நாளோ அல்லது பண்டிகை தினத்தன்று காலையோ வாங்கி விடலாம். வாழை இலை உள்ளிட்டவற்றையுன் வாங்கி விடலாம்.
பொங்கல் பூஜையில் வைப்பதற்கு கல் உப்பு, துவரம் பருப்பு, வெல்லம் உள்ளிட்டவற்றை வாங்கி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வமும் வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. பொங்கல் தினத்தில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ...பொங்கல்..’ என்று சொல்லி கொண்டே பொங்கல் வைப்பது சிறந்தது. அதோடு, வாழை இலையில் இனிப்பு பொங்கல், பால் பொங்கல், பாயசம், வடை, கரும்பு, பழங்கள் என வைத்து நல்ல நேரத்திற்குள் பூஜை செய்து முடித்துவிட்ட வேண்டும். ராகு காலம், நல்ல நேரம் இல்லாத நேரத்தில் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது.
மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் அன்று வீடுகளில் மாடு வைத்துள்ளவர்கள் மாடுகளை குளிப்பாட்டி அதற்கு மாலை அணிவித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி உழவுக்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றி சொல்லி வழிபட வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொஞ்சம் ஊட்டிவிடும் பழக்கமும் உண்டு. மாடு கட்டி வைக்கும் இடங்களுக்கும் மாவிலை, பூ மாலை தோரணங்கள் கட்டிவிடலாம். மாட்டு தொழுவத்தில் மஞ்சல் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யலாம்.
2024-ம் ஆண்டில் புத்தாண்டு முடிந்து பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.
விழா | தேதி | நாள் |
புத்தாண்டு தினம் | ஜனவரி 1 | திங்கட்கிழமை |
பொங்கல் | ஜனவரி 15 | திங்கட்கிழமை |
திருவள்ளுவர் தினம் | ஜனவரி 16 | செவ்வாய் |
உழவர் திருநாள் | ஜனவரி 17 | புதன் |
தைப்பூசம் | ஜனவரி 25 | வியாழன் |
குடியரசு தினம் | ஜனவரி 26 | வெள்ளி |