மேலும் அறிய

Passport Renewal: பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதா? வீட்டிலிருந்தே ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

Passport Renewal Online: காலாவதியான பாஸ்போர்டை வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Passport Renewal Online: காலாவதியான பாஸ்போர்டை ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான கட்டணம், வயது அடிப்படையில் மாற்றமடையும்.

பாஸ்போர்ட் எத்தனை ஆண்டுகள் செல்லுபடியாகும்?

பாஸ்போர்ட் என்பது வணிகம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தேவைப்படும் அத்தியாவசிய ஆவணமாகும். ஆதார், பான் கார்ட் போன்று இது ஓரு அடையாள அட்டையாகவும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. 18 வயது பூர்த்தியானவர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதுவே 18 வயது குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்கள்  5 ஆண்டுகள் வரையிலும், அல்லது 18 வயது பூர்த்தியடையும் வரையிலும் (எது முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில்) பாஸ்போர்ட் செல்லுபடியாகும். 15 முதல் 18 வயதிலான சிறுவர்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பில்லாம். 

எப்போது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கலாம்?

அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது அவசியமாகும். காலாவதியான 3 ஆண்டுகளுக்குள்ளாகவோ அல்லது காலாவதியாவதற்கு ஓராண்டிற்கு முன்பிலிருந்தோ பாஸ்போர்ட்டை பயனாளர்கள் புதுப்பிக்கலாம். பயண திட்டங்களுக்கான இடையூறுகளை தவிர்க்க, காலாவதியாவதற்கு முன்பே அதை புதுப்பிப்பதே சிறந்ததாகும். அந்த வகையில், பாஸ்போர்ட்டை வீட்டிலிருந்தே புதுப்பிப்பது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?

  • https://www.passportindia.gov.in/ என்ற பாஸ்போர்ட் சேவா இணையதள முகவரியை அணுகவும்
  • புதிய பயனராக  இருந்தால் விவரங்களை வழங்கி பதிவு செய்யுங்கள் அல்லது ஏற்கனவே உள்ள பயனராக இருந்தால் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்து லாக் இன் செய்யவும்
  • 'Apply for New Passport/Apply for Re-issue of Passport' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • 'விண்ணப்பப் படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்யவும்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்பதாரர், குடும்பம் மற்றும் முகவரி தகவல் உள்ளிட்ட தேவையான விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
  • அவசரகால தொடர்பு விவரங்கள் மற்றும் முந்தைய பாஸ்போர்ட் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
  • சுய அறிவிப்பை (self declaration) ஏற்று படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, பாஸ்போர்ட் புதுப்பித்தல் கட்டணத்தைச் செலுத்தி, சந்திப்பை (Appoinment) திட்டமிடுங்கள்.

சந்திப்பைத் திட்டமிடுங்கள்:

  • பாஸ்போர்ட் சேவா இணையதள முகவரியை அணுகவும்
  • 'View saved and submitted applications' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 'Make payment and schedule appointment' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்
  • கட்டண முறையைத் தேர்வுசெய்து, பாஸ்போர்ட் சேவா கேந்திராவை (பிஎஸ்கே) தேர்ந்தெடுங்கள்
  • கேப்ட்சா குறியீட்டை உள்ளீடு செய்து உங்கள் PSK ஐ உறுதிப்படுத்தவும்.
  • கிடைக்கக்கூடிய தேதிகளில் இருந்து வசதியான ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து, 'Make Payment & Book Appointment' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

புதுப்பித்தலை டிராக் செய்வது எப்படி?

  • பாஸ்போர்ட் சேவா போர்ட்டலில் உள்நுழையவும் .
  • Track Application Status என்பதை கிளிக் செய்யவும்
  • விண்ணப்ப வகை, கோப்பு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளீடு செய்யுங்கள்
  • உங்கள் பாஸ்போர்ட்டின் நிலையை அறிய 'ட்ராக் ஸ்டேட்டஸ்' என்பதைக் கிளிக் செய்யுங்கள்

புதுப்பித்தலுக்கான நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தைப் பொறுத்தது. சாதாரண திட்டம் 30-60 நாட்கள் எடுக்கும். உடனடித் திட்டத்தில் 3-7 நாட்களில் விரைவாக புதுப்பித்தல் நிறைவடைகிறது. 

பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கட்டணம்:

புதுப்பித்தல் கட்டணங்கள் வயது, புத்தகப் பக்கங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டம்  ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். தட்கல் திட்டத்திற்கு ரூ. 2000 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

  • புதிய பாஸ்போர்ட்/10 வருட விசா பக்கம் (36 பக்கங்கள்) காலாவதியானதால் கூடுதல் கையேட்டுடன் பாஸ்போர்ட்ட புதுப்பிக்க கோரினால்: ரூ.1500 கட்டணம்
  • புதிய பாஸ்போர்ட்/விசா பக்கங்கள் காலாவதியானதால் கூடுதல் கையேட்டுடன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரினால் (60 பக்கங்கள்): ரூ 2000 கட்டணம்
  • மைனர்களுக்கான (18 வயதுக்குட்பட்ட) புதிய பாஸ்போர்ட்/மறு-வெளியீட்டு பாஸ்போர்ட், ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அல்லது மைனருக்கு 18 வயது முடியும் வரை, எது முந்தையதோ அதற்கான பாஸ்போர்ட் கோரினால் (36 பக்கங்கள்): ரூ.1000 கட்டணம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள்.!
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள்.!
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள்.!
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள்.!
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Embed widget