`உங்கள் பாய்ஃபிரண்ட் பிராண்டட் உடைகளை அணிகிறாரா?’ - எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தும் ஆய்வு!
உங்கள் எதிர்கால இணையராக நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் நபர் உங்களை ஏமாற்றிவிடுவார் என நீங்கள் அச்சம் கொள்வதாக இருந்தால், அவர்களிடம் சட்டை, பேண்ட் ஆகியவற்றின் பிராண்ட்களைப் பார்க்கவும்.
காதல் என்பது ஓர் அழகான உணர்வு. காதலுடன் பார்க்கும் போது, இந்த உலகம் மிக அழகான இடமாகத் தெரியும். எனினும், மனிதர்கள் நாம் வெளித்தோற்றத்தில் இருந்து பார்ப்பதைப் போல, உள்ளே இருப்பதில்லை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக தோற்றம் கொண்டிருப்பவர்கள், அன்பாகப் பேசி உங்களை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடன் உங்கள் வாழ்க்கையை இணைக்கும் போது நீங்கள் ஏமாந்து போக ஏராளமான வாய்ப்புகள் உண்டு. மேலும், பலரும் காதலில் ஏமாற்றப்படுவதை எண்ணி அச்சம் கொள்ளலாம். எனவே காதல் உறவுக்குள் நுழைய தயக்கத்தோடு இருப்பார்கள். சமீபத்திய ஆய்வு ஒன்று இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாக வந்திருக்கிறது.
உங்கள் எதிர்கால இணையராக நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் நபர் உங்களை ஏமாற்றிவிடுவார் என நீங்கள் அச்சம் கொள்வதாக இருந்தால், அவர்களிடம் சட்டை, பேண்ட் ஆகியவற்றின் பிராண்ட்களைப் பார்க்கவும். பிராண்ட் லோகோ பெரிதாக அச்சடிக்கப்பட்டிருக்கும் உடையை உங்கள் இணையர் அணிவாரானால், அவர் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில், உங்கள் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவும். அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவரின் இந்த ஆய்வுகளின்படி, பிராண்ட் லோகோ அச்சிடப்பட்டுள்ள டீ ஷர்ட்கள், சட்டைகள் ஆகியவற்றை அணியும் ஆண்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின் மூலமாக, மோசடியாளர்கள் குறித்து பல்வேறு விவரங்கள் வெளிவந்துள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி, பிராண்ட் உடை அணிந்திருக்கும் ஆண்கள் பெண்களை எளிதில் ஈர்க்க கூடியவர்களாக இருக்கின்றனர். இத்தகைய ஆண்கள் தம் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளையும் அளிப்பார்கள் எனப் பெண்கள் நம்புகின்றனர். எனவே, இத்தகைய ஆண்கள் மீது எளிதில் பெண்களுக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது. மோசடியாளர்கள் இதனை சாதகமாக பயன்படுத்தி, பெண்களை ஏமாற்றுகின்றனர்.
பிராண்டட் உடை அணிந்திருக்கும் ஆண்கள் பெண்களின் கண்களுக்கு நன்கு செட்டில் ஆனவர்களைப் போல தோன்றினாலும், உண்மைத்தன்மை முற்றிலும் வேறானது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் டேனியல் க்ரூகர் ஆண்கள் பிராண்ட்களின் பெரிய லோகோ அச்சடிக்கப்பட்டிருக்கும் உடைகளை அணிந்தால் அது தங்களை பெருமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக என்று கூறுகின்றார். அதே வேளையில், பிராண்ட் லோகோ சிறியதாக இருக்கும் உடைகளை அணிவோரை நம்பலாம் எனவும், அவர்கள் தங்கள் பண வசதியை வெளிக்காட்டுவதில்லை எனவும் கூறுகிறார். இந்தச் சூழலில், பெண்கள் தங்கள் இணையின் உடைகளில் உள்ள பிராண்ட் லோகோக்களைக் கவனிக்க வேண்டும்.
இந்த ஆய்வுக்கு நம்மூரில் வழக்கம்போல் கிண்டல்தான் பதிலாக கிடைத்துள்ளது. வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனப்துபோல இந்த ஆய்வு இருப்பதாக பலரும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்